சிஎஸ்கே பிட்சை குறை சொல்லாம ஆடனும்.. நூர் இல்ல பதிரனா வெளிய போகணும்.. காரணம் இதான் – அம்பதி ராயுடு பேச்சு

0
140
Ambati

தற்போது சிஎஸ்கே அணி விளையாடுவதற்கு ஏற்றவாறுதான் சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், எனவே அதற்கு தகுந்தபடி வீரர்கள்தான் விளையாட வேண்டும் என முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு அதிரடியாக கூடியிருக்கிறார்.

மேலும் தற்போதைய சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சிறப்பாக செயல்பட்டு வரும் நூர் அகமது அல்லது பத்திரனா இருவரில் ஒருவர் ஜேமி ஓவர்டன் விளையாடுவதற்காக வெளியேற வேண்டியது இருக்கும் என்றும் கூடியிருக்கிறார். அவரது வெளிப்படையான இந்த கருத்துக்கள் சிஎஸ்கே ரசிகர்களை பெரிய அளவில் ஆச்சரியமடைய வைத்திருக்கிறது.

- Advertisement -

பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்த கருத்து

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது போட்டியை ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி தோற்றது. இந்த போட்டியின் முடிவுக்கு பிறகு பேசி இருந்த அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் கடந்த சில ஆண்டுகளாக தங்களால் சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும், தங்களுக்கு ஹோம் அட்வான்டேஜ் இல்லை எனவும் புலம்பலாக பேசியிருந்தார்.

மேலும் தற்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் யூனிட் பலவீனமாக இருக்கிறது. அத்துடன் அவர்களுக்கு பவர் ஹிட்டர்கள் யாரும் இல்லை. எனவே இந்த இரண்டு பிரச்சனைகளையும் சரி செய்யும் விதமாக பவர் ஹிட் ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் சிஎஸ்கே அணியில் இடம் பெற வேண்டிய தேவை இருக்கிறது. அவர் விளையாட வேண்டும் என்றால் சிறப்பாக பந்து வீசும் நூர் அகமத் அல்லது பத்திரனா வெளியேற வேண்டியது இருக்கும் என்பது உண்மை. தற்போது இந்த இரண்டு விஷயங்களுக்கும் அம்பதி ராயுடு வெளிப்படையாக பதில் அளித்திருக்கிறார்.

- Advertisement -

இருவரில் ஒருவர் வெளியேற வேண்டும்

இதுகுறித்து பேசி இருக்கும் அம்பதி ராயுடு கூறும் பொழுது “சிஎஸ்கே அணி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, அவர்களுக்கு தகுந்தவாறுதான் சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஆடுகளம் பிரச்சினை கிடையாது அவர்கள் அணியாக சேர்ந்து செயல்பட முடியாததுதான் பிரச்சனை. சிஎஸ்கே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் யாரும் எதிர்பார்த்து அளவுக்கு ரன்கள் எடுக்கவில்லை”

இதையும் படிங்க : 36 பந்தில் பூரன் செய்த ஆரஞ்ச் கேப் சம்பவம்.. ரிஷப் பண்ட் எடுத்த எதிர்பாராத முடிவு.. ரசிகர்கள் ஆச்சரியம்

“மேலும் என்னைக் கேட்டால் சி எஸ் கே அணி நிர்வாகம், அவர்களின் பவுலிங் யூனிட்டின் ஆயுதங்களாக இருக்கும் நூர் அகமத் அல்லது மதிஷா பத்திரனா இருவரில் ஒருவரை ஜேமி ஓவர்டன்னுக்காக வெளியேற்றலாம். ஆனால் தற்போதைய நிலையில் அவர்களால் இதை செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் பேட்டிங் யூனிட்டை வலுவாக்குவதற்கு அவர்கள் இதை செய்துதான் ஆக வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -