பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேர்வுக் குழுவில் சில மாற்றங்கள் செய்ததை அடுத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தன்வீர் அகமது சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்விகள்
சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி அதற்குப் பிறகு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்தும் இங்கிலாந்து அணியின் அபாரமான ஆட்டத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தோல்வி இருக்கிறது.
பாகிஸ்தான் அணியின் இந்த தொடர் தோல்வி காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய தேர்வு குழு உறுப்பினர்களாக அலிம் தர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஆகிப் ஜாவேத் மற்றும் அசார் அலி ஆகியோரை அறிவித்திருக்கிறது. இதில் அலிம் தர் என்பவர் சர்வதேச கிரிக்கெட்டில் மூத்த நடுவராக திகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேர்வு குழு உறுப்பினராக அவரை அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தன்வீர் அகமது தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
தேர்வு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட மூத்த நடுவர்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த செய்தியை நான் பஞ்சாபி மொழியில் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். இது சிலருக்கு புரியும் புரியாதவர்கள் நான் சொல்வதை கவனிப்பார்கள். தேர்வு குழுவில் உறுப்பினர் ஒருவர் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரது பெயர் அலிம் தர். அலிம் தாரை நீங்கள் நன்கு அறிவீர்கள். தார் சிறந்த நடுவராக செயல்பட்டதால் தற்போது தேர்வு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க:ஹர்ஷித் ராணா அறிமுகம் ஆவாரா.. சாம்சனுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா? – இந்திய துணை பயிற்சியாளர் பேட்டி
மற்ற அணிகள் அனைத்தும் ஒரு சிறந்த அமைப்பை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் முதல் வாரியம் ஆக இருக்கிறது. தேர்வு குழுவில் அலீம் தாருக்கு ஏதாவது வேலை இருக்கிறதா என்று நீங்கள் என்னிடம் சொல்லுங்கள். பாகிஸ்தான் கிரிக்கெட்டை பாபர் அசாம் அளித்துவிட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் இப்போது எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? பிசிபி தகுதியின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காத வரை கிரிக்கட் என்பது அதே நிலையில் தான் இருக்கும்” என்று கூறுகிறார்.






