இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் நெதர்லாந்தைச் சேர்ந்த ரியான் டென் டஸ்கேட் சஞ்சு சாம்சனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுப்பது பற்றியும், ஹர்ஷித் ராணாவை அறிமுகம் செய்வது பற்றியும் பேசி இருக்கிறார்.
இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணியின் திட்டம் என்னவென்பது குறித்து அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் கூறியிருக்கிறார்.
செயல்படாத சஞ்சு சாம்சன் : காத்திருக்கும் ஹர்ஷித் ராணா
இந்த தொடரில் துவக்க ஆட்டக்காரராக கொடுக்கப்பட்ட இரண்டு வாய்ப்பிலும் அவர் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதே சமயத்தில் இரண்டு தொடர்களாக ஹர்ஷித் ராணா அறிமுகம் ஆவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு இந்தியனில் வாய்ப்பு கொடுத்தால் அவரை நான்கு கோடி ரூபாய்க்கு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா தக்க வைக்க முடியாது என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து பேசி இருக்கும் ரியான் டென் டஸ்கேட் கூறும்பொழுது “நீங்கள் இரண்டு ஆட்டத்தை திரும்பி பார்த்தால் குவாலியரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் நல்ல வேகமான துவக்கத்தை பெற்று மேற்கொண்டு தட்டி விளையாடி அரைசதம் அவரால் எடுத்திருக்க முடியும். ஆனால் அப்பொழுதும் அவர் அணிக்காக அதிரடியாக விளையாட சென்றார்.அணி எப்படி விரும்புகிறதோ அப்படி விளையாடுகிறார்”
எங்களுடைய திட்டம் இதுதான்
மேற்கொண்டு பேசி அவர் கூறும் பொழுது “நாங்கள் சர்வதேச அனுபவம் வீரர்களுக்கு கிடைப்பதற்காக முடிந்த வரையில் நிறைய வீரர்களை அறிமுகப்படுத்த விரும்புகிறோம். அதே சமயத்தில் நாங்கள் சஞ்சு சாம்சனுக்கு இன்னொரு வாய்ப்பையும் கொடுக்க விரும்புகிறோம். எங்களுடைய முதல் திட்டம் இந்த தொடரை வெல்வதுதான். பிறகு புதிய முகங்களை விளையாட வைக்கலாம் என்று நினைத்தோம்”
இதையும் படிங்க: 2 இன்னிங்ஸ் 201 ரன்கள்.. இந்திய அணிக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் – ஆஸி அலெக்ஸ் கேரி பேட்டி
“நாம் விளையாடும் நிலைகளை பொறுத்து அணிக்கு சமநிலையை தரக்கூடிய வீரர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். ஜிதேஷ் சர்மா மற்றும் திலக் வர்மா போன்றவர்கள் இருக்கிறார்கள். மேலும் ஹர்ஷித் ராணாவும் இருக்கிறார். மேலும் அடுத்த 18 மாத காலம் நாம் தொடர்ந்து செல்வதற்கு, சிறப்பான விஷயங்களை முயற்சி செய்து பார்க்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.