பும்ராக்கு இதுல விருப்பமே இல்ல.. சிராஜ்னால கேப்டன் கில் தேவையே இல்லாம செஞ்சாரு – தினேஷ் கார்த்திக்

0
347

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது நாளில் இந்திய அணி கேப்டன் சுப்மான் கில் பத்தை மாற்றுமாறு கள நடுவரிடம் முறையிட்டது பரபரப்பை உண்டாக்கியது.

இந்த சூழ்நிலையில் கில் எடுத்த இந்த முடிவு குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சில முக்கிய விஷயங்கள் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 387 ரன்கள் குவித்த நிலையில் அதற்குப் பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இரண்டாவது நாள் முதல் ஷெஷனில் 63 பந்துகள் வீசிய நிலையில் பந்து மிகவும் மென்மையாகி விட்டதாகவும் உடனே புதிய பந்தை மாற்றும்படியும் கள நடுவரிடம் இந்திய கேப்டன் சுப்மான் கில் முறையிட்டார். இருப்பினும் மாற்றப்பட்ட பந்து பழைய பந்தை விட பெரிதாக நகர்வுகளை ஏற்படுத்தவில்லை. இது பதிவீச்சாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக இது பும்ராவுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என தினேஷ் கார்த்திக் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “மாற்றப்பட்ட பந்து எவ்வளவு நகர்ந்தது என்பதை கருத்தில் கொண்டால் இது வித்தியாசமானதாக இருக்கும். இதுவே இந்த டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாகும். முதலில் 63 பந்துகள் வீசி முடிக்கப்பட்ட பிறகு அதில் பல பந்துகள் பந்து வீச்சாளர்கள் வீசும் திசைக்கு ஏற்ப நகர்ந்து பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை கொடுத்தது. அந்த சமயத்தில் முகமது சிராஜ் இந்த உரையாடலை துவங்கி வைத்ததாகவும் அப்போது கேப்டன் கில் அங்கு தோன்றியது போலவும் இருந்தது. ஆனால் இங்கு பும்ரா இதனை மாற்ற தயார் இல்லை என்பது போல இருந்தது.

இதையும் படிங்க:இங்கிலாந்து குறுக்கு வழியில் வருகிறதா?.. கேப்டன் கில் கோபம்.. வல்லுனர்கள் கருத்து – என்ன நடந்தது?

ஆனால் அதற்குப் பிறகு நடந்தது இன்னும் சுவாரசியமான விஷயம் ஆகும். கொடுக்கப்பட்ட பந்தை பார்த்து அவர்கள் வருத்தப்பட்டனர். என்றால் அதில் எந்த அசைவும் இல்லை. அதைப் பார்த்து நடுவரிடம் மன்றாடிக் கொண்டே இருந்தனர். இறுதியில் அந்தப் பந்து மாற்றப்பட்டது. ஆனால் இயற்கையில் அது சற்று பழையதாக இருந்தது. சுமார் இது ஒரு ஒரு மணி நேரம் வினோதமான செயலாக இருந்தது” என்று தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.

- Advertisement -