ஆசிய கோப்பை தொடரில்.. ருதுராஜ் சேர்க்கப்படாத காரணமே இந்த விஷயம் தான்.. உண்மையை உடைத்த அஜய் ஜடேஜா

0
36

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா இந்திய அணி தேர்வு குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறுகிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துவிட்டு அதற்கு பிறகு துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கு பெற்று விளையாடுகிறது. இந்த தொடரை பொறுத்தவரை 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து சிறிய சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. உதாரணமாக சுப்மான் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டது சற்று சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதும் பெரிய பேசு பொருளாக மாறியது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்கும் ருத்ராஜ் ஆசிய கோப்பை தொடரில் சேர்க்கப்படாததற்கான காரணம் குறித்து ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பிய நிலையில் அஜய் ஜடேஜா அதற்கு பதில் அளித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இதுதான் வேர்வை தனித்துவமாகிறது. தேர்வாளர்கள் யாராக இருந்தாலும் நீங்கள் விரும்பும் எந்த ஒரு அணியும் தேர்வு செய்ய முடியும். தேர்வாளர்களாக இருந்தவர்களை நான் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன், நீங்கள் விரும்பும் எந்த அணியும் தேர்வு செய்ய முடியும். இது எப்போதுமே வெளியே அமர்ந்திருப்பவர்களின் மத்தியில் ஒரு கேள்வி இருக்கும். இந்த வீரரை ஏன் தேர்வு செய்யவில்லை மற்றும் இவர் ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்கிற கேள்விகள் அனைவரின் மனதிலும் கண்டிப்பாக எழும்.

இதையும் படிங்க:சூரியகுமார் விவகாரமா.. 141 கோடி ரூபாய் பணமா.. பாகிஸ்தான் எடுத்த நூதன முடிவு.. இப்படி கூட செய்யலாமா?

இது மாதிரியான கேள்விகள் எப்போதும் முடிவடையாது. ஆனால் நான் அவருடன் உடன்படுகிறேன். நீங்கள் அந்த நிகழ்ச்சியை பார்த்து இருந்தால் நான் ருத்ராஜை ஆதரிக்கிறேன். விளையாட வாய்ப்பு கிடைக்கும்போது போதுமான ரன்கள் இருக்க வேண்டும் அல்லது போதுமான விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். அதனால் நீங்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்க வேண்டியதில்லை. ஏனென்றால் லட்சக்கணக்கான வீரர்களின் விளையாட முடிகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -