தற்போது பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரில் தொடர்ந்து விளையாடுமா இல்லை வெளியேறி செல்லுமா? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருந்து வரும் நிலையில் இதில் புதிய செய்தி வெளியாகியிருக்கிறது.
இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் போட்டி முடிவில் கைகுலுக்காமல் சென்ற காரணத்தினால், போட்டி நடுவரை நீக்கவும், இந்திய அணிக்கு தண்டனை அளிக்கவும் ஐசிசி இடம் கோரிக்கை வைத்திருந்தது. இது நிறைவேற்றப்படாவிட்டால் ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறுவதாக மிரட்டி இருந்தது.
கெத்து காட்டிய ஐசிசி
இந்த நிலையில் கிரிக்கெட் பட்ட விதிகளில் கட்டாயம் கைகுலுக்க வேண்டியது இல்லை என தெரிய வருவதால் இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், இந்த சம்பவத்தில் இந்திய அணிக்கு போட்டி நடுவர் எந்த விதத்திலும் உதவவில்லை எனவும் தெரிய வருவதால், அவரையும் நீக்க முடியாது என ஐசிசி அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகிறது.
தற்போது இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதிலிருந்து தப்பிப்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது நூதனமான ஒரு முடிவை எடுத்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் நகைச்சுவையாக மாறி இருக்கிறது.
பாகிஸ்தானின் நூதன முடிவு
பாகிஸ்தான அணி ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறினால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் நிதி பங்கீட்டில் 141 கோடி ரூபாயை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இழக்கும். மேலும் அடுத்து இந்தியா பாகிஸ்தான் போதும் பெரிய போட்டியில் கிடைக்கும் வருவாய் இல்லாமல் போகும். பாகிஸ்தான் கிரிக்கெட் சேர்மேன் ஆசிய கிரிக்கெட் சேர்மேனாட்டவும் இருப்பதால் இதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டி இருக்கிறது. ஒளிபரப்பு உரிமம் பெற்றவர்களை சமாதானப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஷாகின் அப்ரிடிக்கு எதிரா.. 10 வருஷத்துக்கு முன்னவே அபிஷேக் சர்மாவ ரெடி பண்ணிட்டேன் – தந்தை பேட்டி
இதன் காரணமாக யுஏஇ அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி சம்பிரதாய பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்து விட்டது. ஏனென்றால் தொடரில் இருந்து விலகுவதாக மிரட்டி இருந்தது குறித்து கேள்விகளை சந்திக்க வேண்டி வரும் எனவும், மேலும் இந்த விவகாரத்தில் இந்தியனின் பக்கத்தில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டு இருப்பது குறித்து பதில் அளிக்க வேண்டியது வரும் எனவும், பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்த்து பாகிஸ்தான் நூதனமான முறையில் தப்பித்து இருக்கிறது.






