“நீங்களெல்லாம் எப்படி இந்தியாவுக்கு கேப்டனாக இருந்தீங்க?”- உலகக்கோப்பை டி20 அணியை விமர்சித்த முன்னாள் கேப்டனுக்கு ட்விட்டரில் நேர்ந்த சோகம்!

0
585

ஏன் இந்த இரண்டு வீரர்களையும் டி20 உலக கோப்பையில் எடுக்கவில்லை என்று ட்வீட் செய்த முன்னாள் கேப்டன் அசாருதீன் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

ஆசியக் கோப்பை தொடர் முடிவுற்ற பிறகு இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. அதன் பிறகு அக்டோபர் மாதம் இறுதியில் துவங்கவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.

- Advertisement -

டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி ஆசியகோப்பை கோப்பை தொடர் முடிவுற்ற பிறகு அறிவிக்கப்படும் என்று முன்னதாக செய்திகள் வந்தன. அதற்கு ஏற்றாற்போல செப்டம்பர் 15ஆம் தேதி ஆலோசனைகள் நடத்தப்பட்டு 15 பேர் கொண்ட அணி வெளியிடப்பட்டது. அதில் மூன்று வீரர்கள் ரிசர்வ் வரிசையில் வைக்கப்பட்டுள்ளனர்

பேட்டிங் வரிசையில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருக்கின்றனர். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, அக்சர் பட்டேல், அஸ்வின் ஆகியோர் இருக்கின்றனர். தீபக் சஹர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிசர்வ் வரிசையில் வைக்கப்பட்டிருக்கிறார்.

சுழல் பந்துவீச்சில் சகல் இருக்கிறார். ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நன்றாக செயல்பட்ட ரவி பிஸ்னாய் ரிசர்வ் வரிசையில் வைக்கப்பட்டு இருக்கிறார். வேகப்பந்துவீச்சில் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். ஆவேஷ் கான் வெளியேற்றப்பட்டார். அதேநேரம் அர்ஷதீப் சிங் மிக சிறப்பாக டெத் ஓவர்களில் பந்து வீசியதால் அவருக்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இடது கை வேகப் பந்துவீச்சாளர் என்பதால் கூடுதல் முன்னுரிமையும் கிடைத்திருக்கலாம்.

- Advertisement -

அவரைத் தொடர்ந்து புவனேஸ்வர் குமாரும் இந்த அணியில் இருப்பதால் வேகப்பந்துவீச்சிருக்கு எந்தவித சுணக்கமும் இல்லை. மேலும் முகமது சமி இடம் பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் ஆசிய கோப்பை தொடரில் அவர் இடம் பெற்றிருந்தால் இந்திய அணி கூடுதல் பலத்துடன் பந்துவீச்சில் காணப்பட்டிருக்கும். அந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக இவரை ரிசர்வ் வரிசையில் வைத்திருக்கிறது பிசிசிஐ.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் டி20 அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ரிசர்வ் வரிசையில் வைக்கப்பட்டு இருக்கிறார். இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது பற்றி பலரும் பாராட்டும் விதமாக பேசி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் ஒரு சில மாற்றங்களை செய்து விமர்சனத்தையும் முன் வைத்திருப்பது தற்போது ட்விட்டர் பக்கத்தில் பேசு பொருள் ஆகியுள்ளது. அவர் தனது ட்வீட்டில், இந்த இந்திய அணியில் நான் ஷ்ரேயாஸ் மற்றும் முகமது சமியை உள்ளே எடுத்து வந்திருப்பேன் என்றார். இதற்கு ரசிகர்கள் பலர் தங்களது கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களையும் முன் வைத்திருக்கின்றனர்.

ஷ்ரேயாஸ் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்வதில் திணறுவார். ஆஸ்திரேலிய மைதானம் பவுன்சருக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அவருக்கு மெயின் அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. ரிசர்வ் அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை அறிந்து கொள்ளாமல் அசாருதீன் பேசியதால் தற்போது விமர்சனத்தை சந்தித்து வருகிறார். மேலும் சிலர், நீங்கள் எல்லாம் வீரரின் பலம் மற்றும் பலவீனம் தெரியாமல் எப்படி இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனாக இருந்தீர்கள்? என கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். அதே நேரம் முகமது சமி அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற இவரது கருத்துக்கு ஆதரவு குரலும் வந்த வண்ணம் இருக்கின்றன.