கோலிக்கு அறிவுரை வழங்க.. ரவி சாஸ்திரிகிட்ட இருந்த இந்த விஷயம் கம்பீரிடம் இல்லை – முன்னாள் பவுலிங் கோச் பேட்டி

0
170

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டது தான்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன கௌதம் கம்பீரின் பயிற்சிக் குழு குறித்து முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியின் மோசமான பேட்டிங் ஃபார்ம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக கருதப்படும் விராட் கோலி சமீபகாலமாக தொடர்ந்து மோசமான பேட்டிங் சரிவை சந்தித்து வருகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்த பிறகு விளையாடிய 8 இன்னிங்ஸ்களில் விராட் கோலி தொடர்ந்து ஒரே முறையில் ஆட்டம் இழந்து வந்தது அவரது பேட்டிங் அணுகுமுறை குறித்து பல்வேறு விமர்சனங்களை எழுப்ப தொடங்கியுள்ளது. மேலும் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளுக்கு எப்படி செயல்பட வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர்கள் அறிவுரைகளை கமெண்ட்ரி வழியாக கூறி வந்தனர்.

ஆனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கௌதம் கம்பீர் மற்றும் அவரது பயிற்சி குழுவில் அடங்கிய பயிற்சியாளர்கள் விராட் கோலியின் பேட்டிங் அணுகுமுறைக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கவில்லை என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விராட் கோலி விளையாடிய விதம், அப்போது பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி ஆகியோர் குறித்து பரத் அருண் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

ரவி சாஸ்திரியிடம் இருப்பது கம்பீரிடம் இல்லை

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” ரவி சாஸ்திரி விராட் கோலியிடம் நீ இங்கிலாந்தில் ஸ்விங் பந்து வீச்சுக்கு லெக் ஸ்டம்பில் நிற்கிறாய், நீ அங்கே நிற்க முடியாது. க்ரீசை விட்டு வெளியே வந்து மிடில் ஸ்டம்புக்கு நேராக நிற்க வேண்டும். க்ரீசுக்கு நீ தான் உரிமையாளர் என்கிற முறையில் விளையாட வேண்டும். கோலி இதனை ஆஸ்திரேலியாவில் பின்பற்றி நான்கு சதங்கள் அடித்தார். இதனை விராட் கோலியிடம் சொல்ல ரவி சாஸ்திரிக்கு இருந்த அந்தஸ்த்தும் நம்பிக்கையும் போல ஒருவர் பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிங்க:யுவராஜ் சிங்க்கு அப்புறம் இதை அழகா செய்ய.. சாம்சனால் மட்டுமே முடியும்.. நான் பெரிய ரசிகன் – மஞ்சுரேக்கர் பேட்டி

ஆனால் இது தற்போதைய பயிற்சியாளர்களிடம் இல்லை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அந்த ஆலோசனைகளை வழங்கும் போது விராட் கோலி நிச்சயம் கேள்வி கேட்பார், ஏனென்றால் அவர் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன். நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் நான் என்ன தவறு செய்தேன், நான் ரன்கள் எடுக்கும்போது அதை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேள்விகள் கேட்பார்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -