ஐபிஎல் 2025

தரமான வீரர்களை வாங்கனும்னா.. அந்த 38 வயது வீரரை சிஎஸ்கே அணியை விட்டு நீக்குங்க – ஆஸி டாம் மூடி பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகள் விளையாடி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 9 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிகள் பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அடுத்த சீசனில் வலுவாக களம் இறங்க வேண்டும் என்றால் இந்திய ஜாம்பவானை அணியில் இருந்து நீக்க வேண்டும் என ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி கூறியிருக்கிறார்.

சிஎஸ்கேவின் பரிதாப நிலை

நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே சென்னை அணிக்கு இருக்கிறது. இதில் வெற்றி பெற்று ஒரு இடம் மேலே ஏறி தொடரை முடிக்க விரும்பும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. சிஎஸ்கே மெகா ஆக்சனிலேயே பெரிய தவறை செய்தது.

அதிலும் குறிப்பாக ஸ்பின் காம்பினேஷனுக்கு 38 கோடி ரூபாய் வரை செலவு செய்து பெரிய தவறை செய்தது. இந்த ஏலத்தில் சுமார் 10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின், ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் மற்ற போட்டிகள் அனைத்திலும் வெளியே உட்கார வைக்கப்பட்டுள்ளார். எனவே அடுத்த சீசனில் சிஎஸ்கே வலுவான வீரர்களை பெற வேண்டுமானால் அவரது 10 கோடி ரூபாயை திரும்ப சிஎஸ்கே பெற வேண்டும் என சில முக்கிய விஷயங்களை ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவரை நீக்கியே ஆகணும்

இதுகுறித்து டாம் மூடி விரிவாக கூறும்போது “சிஎஸ்கே ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்ந்தெடுத்ததற்கான பின்னணியில் உள்ள காரணத்தை நான் புரிந்து கொள்கிறேன். ஏனென்றால் சிஎஸ்கே எப்போதுமே நிரூபிக்கப்பட்ட வயது முதிர்ந்த வீரர்களைத்தான் தேர்வு செய்து வெற்றி பெற்றிருக்கின்றனர். மேலும் அந்த தத்துவம் அவர்களுக்கு ஐபிஎல் முழுவதும் வேலை செய்துள்ளது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு கூடிய நிதி கிடைக்க வேண்டுமானால் முதலில் ரிலீஸ் செய்யப்பட வேண்டியது ரவிச்சந்திரன் அஸ்வினைத்தான்.

இதையும் படிங்க:ரிஷப் பண்ட்ட 5 நிமிசத்துலயே சரி பண்ணிடுவேன்.. 2 சாதாரண பிரச்சனைதான் இருக்கு – யோக்ராஜ் சிங் பேட்டி

கடந்த ஏலத்தில் அஸ்வின் சுமார் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். அது பிளேயிங் லெவனில் உறுதி செய்யப்படாத ஒருவருக்கு நிறைய பணம் கிடைத்திருப்பது போல ஆகிவிட்டது. எனவே இந்த விஷயத்தில் சிஎஸ்கே நிர்வாகம் அவருடன் ஒரு கடினமான உரையாடலை நடத்த வேண்டி இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என அவர் பேசியிருக்கிறார். அஷ்வினை தவிர தீபக் ஹூடா, ராகுல் திருப்பாதி போன்ற வீரர்களும் விடுவிக்கப்பட வேண்டிய பட்டியலில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by