இந்திய கிரிக்கெட்

தோனிக்காக கொண்டு வந்த விதிதான்.. ஆனா அதை இப்படி மாத்தினா மட்டுமே ஐபிஎல்-க்கு நல்லது – டாம் மூடி கருத்து

ஐபிஎல் தொடரில் தோனி நீண்ட காலம் விளையாடுவது அந்த தொடருக்கு நன்மை எனவும், அதற்காக கொண்டுவரப்பட்டிருக்கும் அன்கேப்டு பிளேயர் விதியில் சிறிய மாற்றம் ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டாம் மூடி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பாக அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு சில விதிமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. இதில் முக்கியமான விதியாக அன்கேப்டு பிளேயர் விதி பார்க்கப்பட்டது. அந்த விதி மகேந்திர சிங் தோனிக்காகவே கொண்டுவரப்பட்டது என்கின்ற விமர்சனமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியும் அன்கேப்டு பிளேயர் விதியும்

இந்திய கிரிக்கெட் வாரியம் மெகா ஏலத்திற்கு அறிவித்த அன்கேப்டு பிளேயர் விதியில் இந்திய அணிக்காக விளையாடாதவர்கள் மற்றும் இந்திய அணிக்கு விளையாடி 5 ஆண்டு ஆனவர்கள் அன்கேப்டு பிளேயராக கருதப்படுவார்கள் என்று கூறியிருந்தது.

இதன்படி இந்த வீரர்களை நான்கு கோடி ரூபாய்க்கு அணிகள் தக்க வைத்துக் கொள்ளலாம். இதன் அடிப்படையில் எடுத்துக் கொள்ளும் பொழுது மகேந்திர சிங் தோனியை சிஎஸ்கே அணி வெறும் 4 கோடிக்கு தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. எனவே இந்த விதியே தோனிக்காக கொண்டுவரப்பட்டதுதான் என்கின்ற விமர்சனமும் வெளியில் செல்கிறது.

- Advertisement -

தோனியால் ஐபிஎல் தொடருக்கு நன்மை

இது குறித்து டாம் மூடி கூறும் பொழுது “இது ஒரு சிறந்த விதி என்று நான் நினைக்கிறேன். நல்ல உடல் தகுதியுடன் உங்களால் நீண்ட கால விளையாட முடியும் என்றால் இந்த விதி உதவி செய்யும்.இந்த விதி இல்லாவிட்டால் நீங்கள் வீரர்களை தக்க வைப்பதில் சிரமத்தை உண்டாக்குகிறீர்கள்.தோனி போன்ற ஒரு வீரர் இந்த விதியால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது அந்த தொடருக்கு நன்மையைத்தான் கொடுக்கும். அவர் ஒரு அடையாள வீரராக இருப்பவர்”

இதையும் படிங்க : கேப்டன் சூரியகுமார் சொன்ன அத செய்யல.. ஆனா கோச் கம்பீர் சொன்னதை செஞ்சன் – மயங்க் யாதவ் பேட்டி

“இந்த தொடர் ஐந்து ஆண்டுகள் இந்திய அணிக்கு விளையாடாமல் இருப்பவர்களுக்கு பொருந்துகிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் என்னுடைய யோசனை என்னவென்றால் இந்திய அணிக்காக விளையாடி மூன்று ஆண்டுகள் ஆனாலே அன்கேப்டு பிளேயராக கருதப்பட வேண்டும். இது நிறைய வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு அன்கேப்டு வீரர்களாக வருவதற்கு உதவும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts