கேப்டன் சூரியகுமார் சொன்ன அத செய்யல.. ஆனா கோச் கம்பீர் சொன்னதை செஞ்சன் – மயங்க் யாதவ் பேட்டி

0
159
Gambhir

நேற்று இந்திய அணிக்கு அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் போட்டிக்கு முன்பாக கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் தன்னிடம் என்ன கூறினார்கள்? என்பது குறித்து தெரிவித்திருக்கிறார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நேற்று மயங்க் யாதவ் இந்திய அணிக்காக முதல் முறையாக அறிமுகமானார். நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்கள் பந்த வீசிய அவர் ஒரு மெய்டன் செய்து 21 ரன் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். அதிகபட்ச வேகமாக மணிக்கு 149.9 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார்.

- Advertisement -

உற்சாகமும் இருந்தது பதட்டமும் இருந்தது

நேற்று தன் அறிமுகம் குறித்து பேசிய மயங்க் யாதவ் “உண்மையில் நான் உற்சாகமாக இருந்தேன். ஆனால் கொஞ்சம் பதட்டமும் ஆக இருந்தேன். ஏனென்றால் நான் காயத்திற்கு பிறகு திரும்பி வருகிறேன். மேலும் நான் நேரடியாக காயத்தில் இருந்து சர்வதேச போட்டிக்கு இந்திய அணியில் அறிமுகம் ஆகிறேன். இதனால்தான் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன்”

“காயத்திலிருந்து மீண்டு வரும் காலம் மிகவும் கடினமாக இருந்தது. கடந்த நான்கு மாதங்களில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. உண்மையில் என்னை விட என்னை பார்த்துக் கொண்டவர்களுக்குதான் மிகவும் கடினமாக இருந்தது”

- Advertisement -

கம்பீர் ஸார் இதைத்தான் சொன்னார்

மேலும் பேசிய அவர் “இன்று என்னுடைய உடலில் நான் அதிகம் கவனம் செலுத்தினேன். நான் வேகமாக பந்து வீசுவதில் கவனம் செலுத்தவில்லை. மாறாக சரியான லென்த்தில் பந்தை அடிப்பதற்கு முயற்சி செய்தேன். என்னுடைய வேகத்தை பற்றி நினைக்கவில்லை. சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்தை வைத்து சாத்தியமான அளவில் ரன் கசிய விட்டு கைப்பற்ற முயற்சி செய்தேன்”

“நான் ஐபிஎல் தொடரில் கூட மெதுவான பந்துகளை வீசினேன். எனவே நான் வேரியேசனை பயன்படுத்துவது தொடர்பாக கேப்டன் சூரியகுமார் பாய் இடம் பேசினேன். அவர் வேரியேஷனை பயன்படுத்துவதற்கு பதிலாக என்னுடைய ஸ்டாக் பந்தில் என்னுடைய பலத்தில் இருக்குமாறு கூறினார். ஆனால் இந்த ஆடுகளத்தில் பவுன்ஸ் இல்லாத காரணத்தினால், நான் என்னுடைய ஸ்டாக் பந்தான பவுன்சரில் கவனம் செலுத்தவில்லை. வேரியேசனை முயற்சி செய்தேன்”

இதையும் படிங்க: மயங்க் யாதவ் 150 கிமீ வேகத்தில் ஏன் பந்து வீசவில்லை?.. காரணம் குறித்து ஆகாஷ் சோப்ரா விளக்கம்

“கம்பீர் பாய் என்னிடம் பெரிதாக எதையும் சொல்லவில்லை. கடந்த காலங்களில் எனக்கு எது நன்மை தந்ததோ அந்த விஷயங்களை பின்பற்றி அப்படியே விளையாட சொன்னார். வித்தியாசமாக எதையும் முயற்சி செய்வது எதைக் குறித்தும் அதிகமாக யோசிப்பது வேண்டாம் என்று, இதை ஒரு சர்வதேச போட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கூறினார்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -