இந்தியா பக்கத்தில் கூட ஆஸி கிரிக்கெட் வர முடியாது.. டிராவிட்ட வச்சி பெரிய வேலை நடந்தது – கிரேக் சேப்பல் பேட்டி

0
2127
Greg

இந்திய கிரிக்கெட் அமைப்பு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் மிகச் சிறப்பான முறையில் இருக்கிறது என ஆஸ்திரேலியா லெஜெண்ட் கிரேக் சேப்பல் பாராட்டி பேசி இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், அங்கு முதன் முதலில் விளையாடும் ஜெய்ஸ்வால், நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித்ராணா என இந்திய இளம் வீரர்கள் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ராகுல் டிராவிட் தலைமையில் நடந்தது

இது குறித்து கிரேக் சேப்பல் கூறும்பொழுது “இந்திய கிரிக்கெட் அமைப்பு ராகுல் டிராவிட் தலைமையில் இளம் வீரர்களுக்கு நீண்ட வடிவ கிரிக்கெட்டில் முன்னுரிமை கொடுத்தது. இதன் மூலம் இளம் வீரர்கள் நல்ல கிரிக்கெட் நுணுக்கங்களை அறிந்திருப்பதற்கு உதவியது. ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பு இளம் வீரர்களுக்கு வரம்பு வைக்கிறது. ஆண்டின் பெரும்பகுதி கிரிக்கெட் தொடர்களின் போது இளம் வீரர்களின் பள்ளி கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது”

“இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் சிறுவயதில் இருந்தே போட்டி கிரிக்கெட்டில் மிகவும் மூழ்கி இருக்கிறார்கள். விஜய் மெர்ச்சன்ட் டிராபி, கூச் பெஹார் டிராபி போன்ற போட்டி கிரிக்கெட் தொடர்களில் சிறுவயது முதல் ஈடுபட்டு அனுபவத்தை பெறுகிறார்கள்”

- Advertisement -

19 வயது அணியிலேயே பெரிய திறமை

“இப்படி இந்திய இளம் வீரர்கள் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணிக்கு வரும்பொழுதே மிகச் சிறப்பான திறனை பெற்று இருக்கிறார்கள். இலக்குகளை நிர்ணயித்தல், இலக்குகளை துரத்தல் மற்றும் களம் அமைத்தல் மற்றும் தரமான சுழல் பந்துவீச்சை எதிர்கொள்வது என முக்கியமான விஷயங்களில் அப்பொழுதே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது பெரும்பாலும் சீனியர் வீரர்களின் திறமைக்கு ஈடாக இருக்கிறது”

இதையும் படிங்க : சிஎஸ்கே இந்த வீரரை வாங்காததால் மனம் உடைஞ்சுட்டேன்.. உலகம் மிகவும் மோசமானது – ஆகாஷ் சோப்ரா கருத்து

“கேஎல்.ராகுல் தரம் என்ன என்பது நாம் அனைவரும் அறிந்தது. ஆனால் ஜெய்ஸ்வால் வளர்ந்து வரும் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாடுகிறார். சச்சின் மற்றும் விராட் கோலியை தொடர்ந்து இந்திய பேட்டிங் கவசத்தை பெறுவதற்கு தயாராகிறார். ஜெய்ஸ்வாலின் இந்த வளர்ச்சியை இந்தியாவின் உள் கிரிக்கெட் கட்டமைப்பு, மற்றும் இந்திய கிரிக்கெட்டின் திட்டமிடல் என்ன மாதிரியானவற்றை கொடுக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -