சிஎஸ்கே இந்த வீரரை வாங்காததால் மனம் உடைஞ்சுட்டேன்.. உலகம் மிகவும் மோசமானது – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
4689
CSK

2024 ஐ பி எல் மெகா ஏலத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரை வாங்க சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டாதது தனக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது என இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ஐபிஎல் தொடரில் மிகவும் பிரபலமான டேவிட் வார்னர் மற்றும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றம் கொடுத்த பிரித்திவி ஷா உள்பட சில முக்கியமான வீரர்கள் விற்கப்படாமல் போயிருக்கிறார்கள். அந்த வரிசையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய வீரர் ஒருவரும் விற்கப்படாமல் போயிருக்கிறார்.

- Advertisement -

இவரை வாங்க விரும்பாதது ஆச்சரியம்

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” சர்துல் தாக்கூர் பெயர் இல்லாதது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. என்ன காரணத்தினால் அவரை யாரும் வாங்க முன்வரவில்லை என்று எனக்கு தெரியவில்லை. இரண்டு முறை அவருடைய பெயர் வந்த பொழுதும் எந்த ஐபிஎல் அணிகளும் அவரை வாங்க விரும்பவில்லை. சிஎஸ்கே தங்களிடமிருந்த எல்லா வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் சென்றது ஆனால் இவருக்கு செல்லவில்லை”

“தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரை வெல்வதற்கு சர்துல் தாக்கூர் முக்கிய காரணமாக இருந்தார். அதன் பிறகான ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு 10 கோடி ரூபாய் கிடைத்தது. ஆனால் இந்த முறை 2 கோடி ரூபாய்க்கு கூட அவரை யாரும் வாங்க வரவில்லை. இதனால் நான் மனம் உடைந்து போகிறேன்”

- Advertisement -

உலகம் மிக கொடூரமானது

“இதற்கு முன்னர் ஐபிஎல் தொடரில் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் கேப்டன் களாக இருந்தார்கள். ஆனால் இந்த முறை இந்த மூன்று பேரையுமே யாரும் ஏலத்தில் வாங்கவில்லை. மயங்க் அகர்வால் அடிப்படை விலை ஒரு கோடி ரூபாய் என இருந்தும் யாரும் வாங்கவில்லை. அவர் மிகப்பெரிய வீரர் கிடையாது ஆனால் நல்ல வீரர். இந்த விலைக்கு சரியானவர்”

இதையும் படிங்க : நல்ல வீரர்கள் வேண்டாம்னு ஆர்சிபி சொல்லுது.. அங்க நடந்ததை ஏற்கவே முடியல – முகமது கைஃப் விமர்சனம்

“அவர் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடுகிறார். சையத் முஸ்தாக் அலி டிராபியில் ரன்கள் எடுக்கிறார். அவர் எல்லா இடங்களிலும் ரன்கள் எடுத்தும் கூட அவரை யாரும் வாங்கவில்லை. உலகம் சில நேரம் மிகவும் கொடூரமாக இருக்கிறது. ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோருக்கும் இதேதான் நடந்தது.இந்த காலகட்டத்தின் தலைசிறந்த நான்கு பேட்ஸ்மேன்களில் விராட் கோலி மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -