இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஒரே மைதானத்தில் விளையாடுவது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விளையாட மறுத்ததை அடுத்து இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் இருக்கிற சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி லீக் போட்டிகளில் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று மற்றும் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் ஜெயித்து தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி துபாய் ஆடுகளத்தின் நிலைமைகளுக்கு நன்கு பழகிவிட்டதாகவும், அதனால் இந்திய அணிக்கு வெற்றி பெறுவதற்கு கூடுதல் நன்மை இருப்பதாக பல முன்னாள் வீரர்கள் விமர்சித்த நிலையில் கௌதம் கம்பீர், எங்களுக்கும் இது புதிய மைதானம் தான் எனவே இது போன்ற விமர்சனங்கள் வைப்பதில் நியாயம் அல்ல எனவும் பேசியிருந்தார். ஆனால் அதே நேரத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி, ஒரே மைதானத்தில் விளையாடுவதால் அது பந்துவீச்சுக்கு பெரிதாக உதவியதாக சில கருத்துக்களை பேசியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறும்போது ” இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுகிறது. அங்கு அனைத்து போட்டிகளிலும் விளையாடிவிட்டு அங்கு இருக்கிற சூழ்நிலைக்கு நன்கு பழகிவிட்டது. கௌதம் கம்பீர், இது குறித்து இதோ பாருங்கள் எங்களுக்கும் இது ஒரு நடுநிலையான மைதானம், எனவே இது போன்ற விமர்சனங்கள் ஏற்கத்தக்கது இல்லை என்று கூறி இருந்தார். ஆனால் முகமது சமி இதையெல்லாம் மீறி இது குறித்து தனது கருத்தை கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:தோனியின் தலைமையில் வளர்ந்தவர்.. அவர் அருமை என்னன்னு எங்களுக்கு தெரியும் – கோச் கம்பீர் பேட்டி
துபாயில் விளையாடுவது தனது பந்துவீச்சுக்கு உதவியது என்றும் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் தொடர்ந்து விளையாடியது தனக்கு வேலை செய்தது என்றும் கூறியிருந்தார். எனவே இது இந்திய அணிக்கு சிறிய சாதகமாக இருப்பதாக மற்றவர்களை நினைக்க வைத்தது” என்று ஹாக் பேசியிருந்தார். இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா துபாய் ஆடுகளம் எங்களுக்கு புதியது தான் எனவும் எங்களுக்கு இது சொந்த மைதானம் கிடையாது எனவும் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.