தோனியின் தலைமையில் வளர்ந்தவர்.. அவர் அருமை என்னன்னு எங்களுக்கு தெரியும் – கோச் கம்பீர் பேட்டி

0
312

கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியின் கீழ் தற்போது இந்திய அணியை சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நாளை விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் அதிகம் மதிப்பிடப்படாத வீரர் குறித்து கௌதம் கம்பீர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அதிகம் மதிப்பிடப்படாத வீரர்

இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை தற்போது மிகவும் மதிப்பு மிக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் திகழ்கிறார்கள். இந்திய அணியின் ஒட்டுமொத்த வர்த்தகமும் இவர்கள் இருவரை பின்பற்றியே இருக்கிறது. அதற்குத் தகுந்தவாறு இந்திய அணியில் இவர்கள் இருவரின் செயல்பாடும் ஒரே மாதிரி நிலையாக இருந்து வருகிறது. பல போட்டிகளை இவர்கள் இருவருமே இந்திய அணிக்கு வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் தற்போதைய இந்திய அணியில் மற்றொரு சீனியர் வீரரான ரவீந்திர ஜடேஜா, அணிக்கு இக்கட்டான சூழ்நிலையில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார். அதிலும் இவரது ஃபீல்டிங் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. பல போட்டிகளில் இவரது அபாரமான பீல்டிங் திறமையின் மூலம் போட்டி இந்திய அணியின் பக்கம் சாய்ந்து இருக்கிறது என்றால் அது மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில் இந்திய அணியின் கோச் கௌதம் கம்பீர் ஜடேஜாவின் மதிப்பு வெளியே விட ட்ரெஸ்ஸிங் ரூமில் பெரிதாக இருக்கிறது என்று சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அவரின் அருமை எங்களுக்கு தெரியும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ரவீந்திர ஜடேஜா எப்போதுமே கவனிக்கப்படாத வீரராக இருக்கிறார் என்று எப்போதும் நான் உணர்ந்திருக்கிறேன். அவர் அதிகம் பேசப்படாத வீரர் என்று நினைக்கிறேன். அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள். அது டெஸ்ட் வடிவம் அல்லது ஒரு நாள் அல்லது டி20 என எதுவாக இருந்தாலும் சரி. அவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக என்ன செய்திருக்கிறார் என்று பார்த்தால் அதில் மிக முக்கியமான ஒருவர் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:சாம்பியன்ஸ் டிராபி பைனல் முடிஞ்சதும் ரோஹித் சர்மா ஓய்வா.? இந்திய அணியின் துணை கேப்டன் முக்கிய தகவல்

பேட் மற்றும் பந்துவீச்சில் மட்டுமல்ல, களத்தில் சுற்றித் தெரியும் போது கூட அவர் எப்படிப்பட்ட வீரர் என்று தெரியும். அவர் உலக கிரிக்கெட்டின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் என்று நினைக்கிறேன். ஆனால் இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமை பொறுத்தவரை அவரின் மதிப்பு என்ன என்பதை நாங்கள் நன்றாகவே அறிவோம்” என்று கௌதம் கம்பீர் பேசியிருக்கிறார். ஜடேஜா 2009 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு மகேந்திர சிங் தோனியால் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -