ஐபிஎல் 2024

கேப்டன்சி விட்டு தூக்கி.. ரோஹித்துக்கு மும்பை நல்ல விஷயம் பண்ணிருக்கு.. இதனால அவரு வேற டீம் போககூடாது – ஆஸி பிராட் ஹாக் பேட்டி

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக அனைத்து அணிகளும் வருகிற 31ஆம் தேதிக்குள் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராடு ஹாக் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக உள்ளே கொண்டு வந்து ரோஹித் சர்மாவுக்கு மும்பை இந்தியன்ஸ் நல்ல விஷயம் செய்துள்ளது என்று தனது கருத்தை கூறியிருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் சர்ச்சை

ஐபிஎல் தொடரில் முன்னணி அணிகளில் ஒன்றாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ரோகித் சர்மா தலைமையில் 5 ஐபிஎல் கோப்பைகளை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த சில சீசன்களாக அவரது கேப்டன்சி சற்று மோசமாக இருந்த நிலையில் மும்பை நிர்வாகம் குஜராத் அணியில் கேப்டன் ஆக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்கு அழைத்து அவரை கேப்டனாக நியமித்தது.

இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கும் ரோகித் சர்மாவின் ரசிகர்களுக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் கேட்டனாக்க நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்தது. வெளியில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக ஹர்திக் பாண்டியாவாலும் அணியை சரியாக வழி நடத்த முடியவில்லை. இதனால் கடந்த சீசனில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று கடைசி இடத்தை பிடித்தது. இந்த சூழ்நிலையில் ஏற்கனவே இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா செயல்பட்டு வரும் நிலையில் மும்பை அணி ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பை வழங்கியது ரோஹித் சர்மாவுக்கு அழுத்தத்தை குறைக்கும் வகையிலேயே அமைந்துள்ளது என்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மும்பை செய்தது நல்ல விஷயம்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே தொடர்ந்து விளையாட வேண்டும். ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு நல்ல விஷயம் என்று நினைக்கிறேன்.ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களாக ரோஹித் சர்மா இந்திய அணியின் அனைத்து வடிவத்திற்கும் கேப்டனாக இருந்துள்ளார். எனவே இது அவருக்கு அழுத்தத்தையே கொடுத்திருக்கும்.

இதையும் படிங்க:நியூசிலாந்து டெஸ்ட்.. பிராட்மேன் சாதனையை உடைக்க போகும் விராட் கோலி.. மேலும் 2 ரெக்கார்டுகள்

நிச்சயமாக அவருக்கு சிறிது இடைவெளி தேவைப்படும். சிறிது இடைவெளி தேவைப்படும் நிலையில் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்கு கொண்டு வந்து மும்பை நிர்வாகம் சரியான விஷயத்தை செய்தது என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார். இருப்பினும் ரோஹித் சர்மா அடுத்த சீசனில் மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாடுவாரா? அல்லது அவரை வேறு ஐபிஎல் அணி வாங்கி தங்கள் அனைத்து கேப்டனாக நியமிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -
Published by

Recent Posts