நாளை மறுநாள் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்று பெரிய சாதனைகளை முறியடிக்க கூடிய வாய்ப்பில் இந்திய அணியின் வீரர் விராட் கோலி இருக்கிறார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் மகாராஷ்டிரா புனே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி உடைக்க இருக்கும் சாதனைகள்
ஆஸ்திரேலியா அணியின் ஓய்வு பெற்ற துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள்களில் ஒட்டுமொத்தமாக 2423 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 5 சதங்கள் மட்டும் 8 அரை சதங்கள் அடக்கம். விராட் கோலி தற்பொழுது 4 சதங்கள் மற்றும் 11 அரை சதங்களுடன் 2404 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்னும் 20 ரன் எடுத்தால் இதில் டேவிட் வார்னரை முந்துவார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கிரேக் சேப்பல், சனத் ஜெயசூர்யா, ராம்நரேஷ் சர்வான், பிரண்டன் மெக்கலம் ஆகியோர் 31 அரை சதங்கள் எடுத்திருக்கிறார்கள். புனே டெஸ்டில் விராட் கோலி அரை சதம் அடித்தால், 32 அரை சதங்கள் உடன் இவர்களை தாண்டி செல்வார்.
டான் பிராட்மேன் சாதனையை உடைக்க வாய்ப்பு
சர்வதேச கிரிக்கெட்டில் டான் பிராட்மேன் மொத்தமாக 29 டெஸ்ட் சதங்கள் அடித்திருக்கிறார். விராட் கோலியும் 29 டெஸ்ட் சதங்கள் நடித்திருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடிக்கும் பொழுது, அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் டான் பிராட்மேனை கடந்து சாதனை படைப்பார்.
இதையும் படிங்க : இலங்கை தொடர்.. நியூஸிலாந்து அணி அறிவிப்பு.. சிஎஸ்கே வீரர் கேப்டன்.. 2 உலக கோப்பைக்கு அஸ்திவாரம் போடும் நியூஸி கிரிக்கெட்
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி நல்ல முறையில் விளையாடி 70 ரன்கள் எடுத்திருந்தார். அவருடைய பேட்டிங் டச் சிறப்பான முறையில் இருக்கிறது. எனவே டான் பிராட்மேன் அதிக சத சாதனையை விராட் கோலி முறியடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ரசிகர்கள் நம்புகிறார்கள்!






