வெளிய உட்கார்ந்து அணி தோல்வி அடைவதை பார்க்க என்னால முடியல.. ரொம்ப விரக்தியா இருக்கேன் – சஞ்சு சாம்சன் ஆதங்கம்

0
62

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் இன்று நடைபெற உள்ள 59வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளன.

இதில் பெரும்பாலான போட்டிகளை தவறிவிட்ட ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது அணி தோல்வி அடைவது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ராஜஸ்தான் பஞ்சாப் மோதல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் காயம் காரணமாக தொடக்கத்தில் முதல் மூன்று போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். ரியான் பராக் தலைமையில் ராஜஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது. அதற்குப் பின்னர் காயம் குணமடைந்து மீண்டும் விளையாட துவங்கிய சாம்சன் சில போட்டிகளில் விளையாடிவிட்டு மீண்டும் காயம் காரணமாக வெளியேறினார்.

அதற்குப் பிறகு ரியான் பராக் தலைமையில் விளையாட ஆரம்பித்த ராஜஸ்தான் அணி ஒரு சில போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி மூன்று போட்டிகளில் வெற்றி மற்றும் ஒன்பது போட்டிகளில் தோல்வி என புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. எனவே தற்போது காயத்தில் இருந்து குணமடைந்திருக்கும் சாம்சன் இன்றைய போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தனது அணி குறித்து பேசி இருக்கும் சாம்சன் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

விரக்தியாக உணர்கிறேன்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் காயம் குணமடைந்து உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றேன். எனவே மீண்டும் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறேன். ஆமாம் விரக்தி என்பது சரியான வார்த்தையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். வெளியே அமர்ந்து கொண்டு விளையாட்டுக்களை பார்ப்பது மிகவும் கடினமாகவும் சவாலாகவும் இருந்தது. நான் முக்கியமாக பல போட்டிகளை தவற விட்டேன் அது இன்னும் என்னை கடினம் ஆக்கியது.

இதையும் படிங்க:ரோஹித் பெயரில் ஸ்டாண்ட்.. இனி எனக்கு இதுக்கு பிரச்சனையே இருக்காது.. ஈஸியா போன் பண்ண முடியும் – டிராவிட் கலகலப்பு

மனரீதியாக அணி தோல்வி அடைவதையும் களத்தில் பங்கு பெற முடியாமல் போவதையும் பார்க்கும் போது அது இன்னும் என்னை கடினம் ஆக்கியது. ஆனால் இவை கிரிக்கெட்டின் ஒரு பகுதியாகவும் எனவே நடத்த விஷயங்களை நேர்மறையாக எடுத்துக் கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்துவது முக்கியம். ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் தொடரை முடிப்பது நல்லதல்ல. இந்த போட்டித் தொடர் மிகவும் சவாலானது ஒரு பந்தில் போட்டி மாறலாம், நாங்கள் கடைசி நான்கு ஆட்டங்களில் இதே முறையில் தோல்வி அடைந்தோம். எனவே தவறுகளில் எடுத்த பாடம் கற்றுக்கொண்டு சிறப்பாக விளையாடுவது இனி முக்கியம்” என பேசி இருக்கிறார்.

- Advertisement -