2021 அஸ்வினை ஸ்லெட்ஜிங் பண்ணதுக்கு நான் வருத்தப்படலை.. ஏன்னா அவர் இதை செஞ்சார் – ஆஸி டிம் பெய்ன் பேட்டி

0
144
Paine

ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் 2021ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது ரவிச்சந்திரன் அஸ்வினை ஸ்லெட்ஜிங் செய்ததற்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார்.

2021 ஆம் ஆண்டு இளம் இந்திய அணி ஆஸ்திரேலியாலில் வைத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. இரண்டாவது முறையாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் பெற்ற வெற்றி, குறிப்பாக கடைசி டெஸ்டில் காபாவில் பெற்ற வெற்றி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அஸ்வின் விஹாரி செய்த சிறப்பான சம்பவம்

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று இருந்தன. இந்த நிலையில் சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஹனுமான் விகாரியுடன் இணைந்து ரவிச்சந்திரன் அஸ்வின் 42 ஓவர்கள் பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்தார். இதுவே தொடரை வெல்ல முக்கிய காரணமாகவும் அமைந்தது.

இந்த குறிப்பிட்ட மூன்றாவது சிட்னி டெஸ்ட் போட்டியில் அப்போது ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருந்த டிம் பெய்ன் முதுகு வலியுடன் பேட்டிங் செய்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வினை, அடுத்த டெஸ்ட் போட்டி விளையாட காபாவுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சில வார்த்தைகளை விட்டு சீண்டி இருந்தார்.

- Advertisement -

சீண்டியதற்கு காரணம் இதுதான்

தற்போது இது குறித்து பேசி இருக்கும் டிம் பெயின் கூறும்பொழுது ” நான் அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினர் உடன் எதுவுமே பேச கிடையாது. நான் பேசியது ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் மட்டுமே. நான் அப்போது அடுத்த டெஸ்ட் போட்டிக்கு உங்களை காபாவுக்கு அழைத்துச் செல்ல என்னால் இப்பொழுதே காத்திருக்க முடியவில்லை என்று கூறினேன்”

“ஏனென்றால் ரவிச்சந்திரன் அஸ்வின் எங்களை நிறைய எரிச்சல் ஊட்டினார். என்னை அதிக முறை ஆட்டம் இழக்க செய்து வெளியேற்றினார். அது எனக்கு மேலும் எரிச்சல் ஊட்டக் கூடியதாக அமைந்திருந்தது. இதன் காரணமாகவே நான் ரவிச்சந்திரன் அஸ்வினை சீண்டினேன்”

இதையும் படிங்க : பிசிசிஐ இப்படி செஞ்சா.. அது உலக கிரிக்கெட்டுக்கு நல்லதே கிடையாது – பாகிஸ்தான் ஜாகீர் அப்பாஸ் பேட்டி

“மேலும் அந்த சிட்னி டெஸ்டின் போது அவர் ஜாக்கிங் செய்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். ஆனால் பிறகு பேட்டிங் செய்ய வருவதற்கு முன்பாக திடீரென முதுகு வலி என்று அவர் கூறினார். பிறகு அவர் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு விளையாடவும் வரவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -