இந்தியா பாகிஸ்தான் அணிகள் எதிர்காலத்தில் கிரிக்கெட் விளையாடுவது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ் கவலை தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடுத்த ஆண்டு அவர்களது நாட்டில் நடக்க இருக்கும் சாம்பியன் டிராபி தொடரை பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கிறது. இதற்காக பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்தும் இருக்கிறது. எனவே தொடர் வெற்றிகரமாக நடக்க இந்திய அணி பாகிஸ்தான் செல்வது அவசியமாக அமைகிறது.
இரு அணிகளுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி
இந்திய அணி பாகிஸ்தான் வந்து சாம்பியன் டிராபி தொடரில் விளையாடினால் மட்டுமே எதிர்பார்த்த அளவுக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடர் வெற்றியடையும் என்பது உலகில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயமாக இருக்கிறது. எனவே இந்திய அணி வராவிட்டால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தோல்வியடையும் என்பது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு கவலை அளிப்பதாக இருக்கிறது.
அதே சமயத்தில் உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய நாடாக இருக்கும் இந்தியா ஐசிசி நடத்தும் தொடரில் பங்கேற்காமல் இருப்பது மிகவும் கடினமான ஒன்று. உலக கிரிக்கெட்டில் பெரும் பகுதியான கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். எனவே பிசிசிஐக்கும் இதில் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.
அது கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது
அடுத்த வருடம் துவங்கியதும் இந்திய அணி பாகிஸ்தான் சென்று சாம்பியன் டிராபி தொடர்விளையாடுமா? என்பது குறித்து பெரிய விவாதங்கள் கிரிக்கெட் உலகில் எழ ஆரம்பித்து விடும். தற்போது அது குறித்து ஜாகீர் அப்பாஸ் கவலை தெரிவித்து பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க : 2001க்கு பிறகு.. நம் இந்தியா சென்று விளையாடவே பயப்பட்டேன்.. காரணம் இதான் – ஆடம் கில்கிறிஸ்ட் பேச்சு
இதுகுறித்து ஜாகீர் அப்பாஸ் கூறும் பொழுது “இந்திய அணி பாகிஸ்தான் வந்து விளையாடாது என்றால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஏனென்றால் இந்தியா போன்ற ஒரு அணி இப்படி செய்வது கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது.ஏனென்றால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்வதை உலகமே உற்று நோக்குகிறது. இவர்கள் எங்கு விளையாடினாலும் இரு நாட்டு ரசிகர்களும் அதை பார்ப்பார்கள். இவர்கள் மோதிக் கொள்ளும் போட்டி கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய விஷயம்” என்று கூறி இருக்கிறார்.






