இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணிக்கு எதிராக உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பற்றி ஆரோன் பின்ச் பேசியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பேட்டிங் யூனிட்டை வடிவமைப்பதில் நிறைய யோசனைகளை கொண்டு செயல்பட்டு கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா பேட்டிங் யூனிட் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எந்த வரிசையில் அமையும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
ஸ்மித்தை வைத்து பரிசோதனை
ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் டெஸ்ட் பேட்டிங் யூனிட்டில் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் கேமரூன் கிரீன் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரையும் வைக்க விரும்புகிறது. இவர்களை வைக்க வேண்டும் என்றால் ஸ்பெஷல் ஓபனரை உள்ளே கொண்டு வர முடியாது. இதன் காரணமாக பிளேயிங் லெவனில் இருக்கும் ஒரு பேட்ஸ்மேன் துவக்க வீரராக சென்று விளையாட வேண்டும்.
இதற்காக ஸ்மித்தை துவக்க வீரராக ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுப்பி இருக்கிறது. இதில் அவர் மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே துவக்கட்டக்காரராக அடித்திருக்கிறார். அவருக்கு துவக்க இடம் சரிப்பட்டு வரவில்லை. எனவே தற்போது இது ஒரு பெரிய விவாதமாக மாறி இருக்கிறது.
ஆரோன் பின்ச் அறிவுரை
இதுகுறித்து பேசி இருக்கும் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கூறும்பொழுது “ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் யூனிட்டில் கேமரூன் கிரீனுக்கு ஒரு நல்ல இடத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது. இதன் காரணமாக அனைத்து துவக்க வீரராக மேலே தள்ளப்படுகிறார். இந்த இடத்தில் இது அர்த்தம் உள்ளதாக இருக்கிறது”
“ஸ்மித் மேலே செல்லும் நகர்வு எங்கே இருந்து வந்திருக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஸ்மித் தன் கைகளை உயர்த்தி துவக்க வீரராக செல்வதாகவும் இது புதிய சவாலுக்கான நேரம் என்பதாகவும் கூறினார். அவர் அந்த இடத்தில் தன்னை நிரூபிக்கவும் செய்திருக்கிறார்”
இதையும் படிங்க : 14 இன்னிங்ஸ் பாபர் அசாம்.. தப்பு செஞ்சது ஷாகின் அப்ரிடி மட்டும் இல்ல.. விசாரணை வேணும் – அகமத் சேஷாத் விமர்சனம்
“இதில் எனக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் நான் சொல்கிறேன் உங்களுடைய டெஸ்ட் கிரிக்கெட் ரன் சராசரி 60க்கும் மேல் இருக்கும் பொழுது, நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சிறப்பாக விளையாடியிருக்கும்பொழுது, நீங்கள் மீண்டும் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்திற்கு செல்ல வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.