என் அனுபவத்துல சொல்றன்.. கம்பீர் டீம் செலக்சன் தப்பு.. இது பொறுப்பில்லாம போயிடும் – ஆரோன் பின்ச் விமர்சனம்

0
39
Finch

கம்பீர் டீம் செலக்சன் தவறாக இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கூறியிருக்கிறார். மேலும் அடுத்த போட்டிக்கு அணியில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்தும் பேசியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளுக்கும் இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட விதம் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இரண்டாவது போட்டியில் இந்திய பேட்டிங் வரிசையில் கம்பீர் செய்த மாற்றங்கள் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

- Advertisement -

என் அனுபவம் இது

இதுகுறித்து ஆரோன் பின்ச் பேசும்பொழுது “அர்ஸ்தீப் சிங் அடுத்த போட்டிக்கு அணியில் இருக்க வேண்டும். அப்படி அவர் இல்லை என்றால் நான் ஆச்சரியப்படுவேன். டி20 கிரிக்கெட்டில் நான் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் அதிக பேட்டர்கள் உடன் செல்லும் பொழுது அங்கு பொறுப்பு நீர்த்துப் போகும்”

“வேறொரு பேட்டர் பொறுப்பை செய்வார் என இன்னொரு பேட்டர் ஆழ்மனதில் நினைக்கிறார். நீங்கள் ஒரு பேட்டர் குறைவாக விளையாடும்போது மற்றவர்கள் முன்னேறக்கூடிய அளவு பெரிய அளவில் இருக்கிறது. இந்தியா டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து செயல்பட்டு வருகிறது என்று தெரியும். அதற்கான காம்பினேஷன் கண்டறிய முயற்சி செய்கிறது”

- Advertisement -

அபிஷேக் ஷர்மா அசத்தல்

“ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய வந்த பொழுது பும்ரா வீசிய முதல் ஓவரில் அவர் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு சில தலைவலிகளை ஏற்படுத்தினார். ஆனால் அடுத்து வந்த ஹர்ஷித் ராணா தண்டனையைப் பெற்றார். ஹெட் ஆரம்பத்தில் நிறைய சேதாரங்களை செய்தார் பின்பு அதை மார்ஸ் எடுத்துச் சென்றார்”

இதையும் படிங்க: நமது பெண்கள் அணி உலக கோப்பையை ஜெயிக்கும்.. அதுக்கு ஒரே காரணம் இதுதான் – அபிஷேக் ஷர்மா பாராட்டு

“அபிஷேக் ஷர்மா காட்டிய நிதானம் மிகவும் அற்புதமாக இருந்தது. அவர் விளையாடியதில் இது மிகச் சிறந்த ஆட்டமாக அமைந்திருக்கிறது. அதே சமயத்தில் அவரை ஒரு முனையில் தனியாக நிற்க வைத்து விட கேப்டன் மார்ஸ் செயல்பட்ட விதம் மிக அருமையாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -