ரிஷப் பண்ட்க்கு இந்த திறமை இருக்கு.. வேற யார்கிட்டயும் அத பாக்கல – ஆஸி முன்னாள் வீரர் பேட்டி

0
916

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் மிக பொறுமையாக விளையாடிய ரிஷப் பண்ட் இரண்டாவது இன்னிங்ஸில் தனது வழக்கமான அதிரடி பாணியை ஆரம்பித்தார். அதுவரை சிக்கலில் இருந்த இந்திய அணி இவரது அதிரடி ஆட்டத்தால் ஓரளவு தலை நிமிர்ந்தது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள் மெக்டொனால்ட் மற்றும் சைமன் காடிச் ரிஷப் பண்ட் குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விமர்சனத்திற்கு உள்ளான ரிஷப் பண்ட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்த விதம் குறித்து சில முன்னாள் வீரர்கள் அவரை விமர்சனம் செய்தனர். குறிப்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பண்ட் பொறுப்பற்ற முறையில் விளையாடியது தன்னை கவரவில்லை என்று வெளிப்படையாக கூறினார். மேலும் சுனில் கவாஸ்கர் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த விதம் குறித்து சற்று கடுமையாகவே சாடினார்.

இதனை மனதில் வைத்து விளையாடிய ரிஷப் பண்ட் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மிகப் பொறுமையான ஆட்டத்தை விளையாடினார். அதாவது முதல் இன்னிங்ஸில் 98 பந்துகளை எதிர்கொண்டு 40 ரன்கள் குவித்த பண்ட் அதற்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸின் தனது வழக்கமான அதிரடி பாணியை மேற்கொண்டார். அப்போது சிக்கலில் இருந்த இந்திய அணியை வெறும் 33 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் என 61 ரன்கள் குவித்து இந்திய அணி ஓரளவு தப்ப முயற்சி செய்தார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மெக்டொனால்ட் பண்ட் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பண்ட் விளையாடிய விதம் ஆச்சரியம் இல்லை

இது குறித்து அவர் கூறும் பொழுது “முதலில் ரிஷப் பண்ட் குறித்து கூறும் பொழுது இரண்டாவது இன்னிங்ஸில் அவர் விளையாடிய விதம் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஆனால் முதல் இன்னிங்ஸில் அவர் விளையாடியதே எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. ரிஷப் பண்ட் குறிப்பாக பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய அபாரமான திறமையை பெற்றிருக்கிறார். இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் சைமன் காடிச் கூறும்பொழுது “எனக்கு பண்ட் விளையாடிய இரண்டு ஆளுமைகளும் பிடித்திருக்கிறது.

இதையும் படிங்க:நான் சொல்றேன் நம்புங்க.. விராட் கோலி இந்த விஷயத்தை செய்தால்.. 2025ம் ஆண்டு அவருக்குத்தான் – ராபின் உத்தப்பா நம்பிக்கை

நேற்று அவர் விளையாடிய விதத்தை பார்க்கும் போது அழகாக இருந்தது அவர் தன்னை மிக இயல்பாக பயன்படுத்தினார். அதற்கு முன்னர் நடைபெற்ற மெல்போன் டெஸ்ட் போட்டியில் அவர் ஆட்டம் இழந்த விதம் குறித்து விமர்சனம் எழுந்த நிலையில் அது இந்திய அணியின் தோல்விக்கு வழி வகுத்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை” என்று கூறி இருக்கிறார். தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -