சர்பராஸ் கானுக்கு இந்த பலவீனம் இருக்கு.. எங்க நாட்டுல தடுமாறுவாரு.. ஆனா கேஎல் ராகுல் வேணாம் – பிராட் ஹாக் பேட்டி

0
488
Hogg

இந்திய இளம் வீரர் சர்பராஸ் கானுக்கு பேட்டிங்கில் ஒரு முக்கிய பலவீனம் இருப்பதாகவும், அதனால் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் அவர் விளையாடுவதற்கு சிரமப்படுவார் என்றும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியிருக்கிறார்.

நியூசிலாந்துக்கு எதிராக நாளை மறுநாள் தொடங்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கில் காயம் குணமடைந்து உள்ளே வந்தால், சர்பராஸ் கான் மற்றும் கேஎல்.ராகுல் இருவரில் யாரை நீக்குவது என்பது ஒரு பெரிய கேள்வியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய துணை பயிற்சியாளர் சூசக பதில்

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் துணை பயிற்சியாளராக இருக்கும் நெதர்லாந்தின் முன்னாள் வீரர் ரியான் டென் டஸ்கேட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதாக இருந்தால் வெளியேற்றப்படும் வீரர் யாராக இருப்பார் என்பதை கொஞ்சம் சூசகமாக தெரிவித்து இருக்கிறார்.

அந்த வகையில் கேஎல்.ராகுலை நீக்கிவிட்டு, சர்பராஸ் கானை விளையாட வைப்பார்கள் என்று தெரிகிறது. மேலும் இதே கருத்தையே பிராட் ஹாக் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் ஒருவேளை ரிசப் பண்ட் விளையாடாவிட்டால் கூட விக்கெட் கீப்பர் இடத்தில் கேஎல்.ராகுல் விளையாட கூடாது என்றும், துருவ் ஜுரல் விளையாட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சர்பராஸ் கானின் பேட்டிங் பலவீனம்

இது குறித்து பேசி இருக்கும் பிராட் ஹாக் கூறும் பொழுது “சர்பராஸ் கான் முன்னேறிச் சென்று இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் விளையாடுவது குறித்து நான் கொஞ்சம் கவலைப்படுகிறேன். அடுத்து அவர் ஆஸ்திரேலியா தொடரில் இடம் பெற்றால், அங்குள்ள ஆடுகளங்களில் பவுன்ஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அவருடைய கைகள் தாழ்வாக இருக்கின்ற காரணத்தினால் நிச்சயம் அவருக்கு இது தொந்தரவு ஏற்படுத்தும்”

“தற்போது நான் கேஎல்.ராகுல் இடத்தில் கில்லை கொண்டு வருவேன். நீங்கள் சர்பராஸ் கானை கட்டாயம் விளையாட வேண்டும். அவர் உங்களுக்கு முக்கியமான நேரத்தில் 150 ரன்கள் அடித்திருக்கிறார். அதே சமயத்தில் கேஎல்.ராகுல் கொடுத்த வாய்ப்பை இரண்டு முறையாகவும் பயன்படுத்தி கொள்ளவில்லை”

இதையும் படிங்க : 2வது டெஸ்ட் இந்திய அணி அதை செய்யட்டும்.. எங்களுக்கு எந்த கவலையும் இல்லை – டேரில் மிட்சல் சவால்

“ஒருவேளை ரிஷப் பண்ட் விளையாட முடியாவிட்டால் அவர்கள் இரண்டாவது விக்கெட் கீப்பராக ஜுரலை விளையாடுவார்களா? இல்லை கே.எல்.ராகுலை விளையாடுவார்களா? நான் ஜுரலை விளையாட வைப்பேன். ஏனென்றால் இந்தியாவிற்கு முன்னேறி செல்லும் பொழுது எதிர்காலத்தில் பேக்கப் விக்கெட் கீப்பர் வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -