2வது டெஸ்ட் இந்திய அணி அதை செய்யட்டும்.. எங்களுக்கு எந்த கவலையும் இல்லை – டேரில் மிட்சல் சவால்

0
296
Mitchell

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டால் அது குறித்து தங்களுக்கு கவலை இல்லை என நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சல் கூறி இருக்கிறார்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் மகாராஷ்டிரா புனே மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் நியூசிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றி மிகப்பெரிய சாதனை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மகாராஷ்டிரா புனே மைதான நிலவரங்கள்

தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய அணி நிர்வாகம், புனே மைதானத்தில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மெதுவான ஆடுகளத்தை அமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக நியூசிலாந்து தரப்பு தங்களது பேட்டிங் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது.

அதே சமயத்தில் இந்திய அணி சமீப சில ஆண்டுகளாக சுழல் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணி தானாகவே தனக்கு தொந்தரவை உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

எங்களுக்கு எந்த கவலையும் இல்லை

இது குறித்து நியூசிலாந்து அணியின் வீரர் டேரில் மிட்சல் கூறும்பொழுது “ஆடுகளம் எப்படியாக இருந்தாலும் அதை எங்களால் மாற்ற முடியாது என்பது உண்மை. ஆடுகளம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் நாங்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான வழிகளை கண்டுபிடித்து வந்து செயல்படுவோம். மேலும் பேட்டிங்கில் ரன்களையும் எடுப்போம்”

இதையும் படிங்க : கம்மின்ஸ் இந்திய அணிக்கு எதிரா.. இந்தப் 19 வயசு பையனை கொண்டு வாங்க.. மாஸ் பண்ணுவார் – பிரெட் லீ நம்பிக்கை

“பாருங்கள் பெங்களூர் டெஸ்ட் போட்டி கடந்த காலத்தில் இருக்கிறது அது முடிந்துவிட்டது.நாங்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக தயாராகி வருகிறோம். முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்காக நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஒரு புதிய போட்டி மற்றும் ஒரு புதிய ஆடுகளம். இங்கு சவால் வித்தியாசமானதாக இருக்கும். எனவே நாங்கள் சென்று எங்கள் வழியில் விளையாடுவோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -