ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சாம்பியன் டிராபி தொடரை எந்த அணி வெல்லும்? யார் அதிக விக்கெட் மற்றும் ரன் எடுப்பார்கள் என்பது குறித்து தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
இப்போதைக்கு சாம்பியன் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணி தங்களுடைய முன்னணி ஐந்து நட்சத்திர வீரர்கள் இல்லாமல் பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அந்த அணி தற்போது பலவீனமாக கணிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மித் புதிய கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கிறார்.
இந்த அணியே கோப்பையை வெல்லும்
தங்களது அணி தொடரில் மிகவும் பலவீனமாக இருப்பதை ஏற்றுக் கொண்டுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சில முக்கியமான சாம்பியன்ஸ் டிராபி கணிப்புகளை கூறியிருக்கிறார். அது இந்திய அணியை முன்வைத்து கூறப்பட்டு இருக்கிறது என்பதுதான் இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மைக்கேல் கிளார்க் பேசும் பொழுது ” இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வெல்லும் என்று நான் நினைக்கிறேன். மேலும் இந்த தொடரில் யார் அதிக ரன் எடுப்பார்கள் என்றால், இந்தத் தொடரை வெல்லப்போகும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிக ரன் எடுப்பவராக இருப்பார். ஏனென்றால் தற்போது அவர் நல்ல பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி வந்திருக்கிறார்”
அதிக விக்கெட் வீழ்த்தும் வீரர்
” நான் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட போகிறது என்று நினைக்கவில்லை. ஆனால் அந்த அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு சூப்பர் ஸ்டார். அவரை எதிர்கொண்டு விளையாடுவது கடினமான ஒரு விஷயம். அவர் சிறப்பான முறையில் சாம்பியன்ஸ் டிராபியில் வருவார் என்று நான் நினைக்கிறேன். எனவே அவரே அதிக விக்கெட் கைப்பற்ற கூடியவராக இருப்பார்”
இதையும் படிங்க : துபாயில் ஆடுகளத்தில் நடக்க போகும் மாற்றம்.. தப்பித்த இந்திய அணி.. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி
“மேலும் தற்போது டிராவிஸ் ஹெட் மிகவும் அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார் மேலும் சமீபத்தில் ஆஸ்திரேலிய கோடைகாலத்திலும் டெஸ்ட் தொடரில் மிகவும் அபாரமான முறையில் விளையாடினார். இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. சரியான ஓய்வுடன் அவர் மீண்டும் திரும்பி வரப் போகிறார். அவரே இந்த தொடரின் நாயகனாக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.






