தற்போது இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாய் மைதானத்தில் விளையாடும் போட்டிகள் குறித்து இந்திய அணி என்று ரசிகர்களுக்கு இருந்த கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆடுகளம் குறித்த புதிய செய்திகள் வெளியாகியிருக்கிறது.
இந்திய அணி தனது முதல் போட்டியில் துபாய் மைதானத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து இதே மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பிப்ரவரி 23, நியூசிலாந்து அணிக்கு எதிராக மார்ச் இரண்டாம் தேதிகளில் விளையாடுகிறது.
துபாய் மைதானம் குறித்த கவலை
துபாய் மைதானத்தை பொருத்தவரையில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி கடந்த 10 ஒருநாள் போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. பொதுவாகவே இங்கு இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெறுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. இப்படியான மைதானத்தில் இந்திய அணி 5 போட்டிகளை வென்று தொடரையும் கைப்பற்றுவது மிகவும் கடினம் என்று பேசப்பட்டு வந்தது.
மேலும் தற்போது சவுதியில் நடைபெற்ற ஐஎல்டி டி20 லீக்கில் மொத்தம் 15 போட்டிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் நடத்தப்பட்டன. இதற்கு முன்பாகவும் இந்த மைதானத்தில் சில முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று இருக்கின்றன. இதன் காரணமாக ஆடுகாலங்கள் மிகவும் பழையதாக மாறி இருந்தது. இதனால் பந்து மெதுவாகவும், தாழ்வாகவும் வரும் ஆபத்து இருந்தது.
வெளியான மகிழ்ச்சி செய்தி
இந்த நிலையில் இந்திய அணி துபாய் மைதானத்தில் விளையாட இருக்கும் சூழ்நிலையில் புதிய ஆடுகளங்கள் உருவாக்கப்பட்ட இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி பழைய ஆடுகளத்தில் விளையாட வேண்டிய அவசியம் இருக்காது. இரண்டு புதிய ஆடுகளங்கள் உருவாக்கப்பட்டு இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.
இதையும் படிங்க : கில் வெளிய போனாலும் அணி பீதியாகாது.. இது முன்னாடி நடந்ததுதான.. பாண்டியாவை மறைமுகமாக விமர்சிக்கும் ஜிடி சிஓஓ
இதன் காரணமாக தற்போது போட்டியில் வித்தியாசமான முறையில் இந்திய அணி தோல்வி அடைவது தடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணிக்கு ஒரு சிறிய பின்னடைவாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் கிடைக்கும் ஆடுகளம் சூழ்நிலையில் பும்ரா இல்லாததும் ஒரு கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் இல்லாததும் அமைகிறது.