ஆஸ்திரேலியா அணியின் 2001 இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு பிறகு மீண்டும் வந்து இந்திய மண்ணில் விளையாடுவதற்கு தான் பயம் கொண்டதாக ஆடம் கில்கிறிஸ்ட் கூறியிருக்கிறார்.
உலக கிரிக்கெட்டில் தனி ஒரு அணியாக அப்போது விளங்கி வந்த ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி 2001 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகை ஆச்சரியப்படுத்தி இருந்தது. குறிப்பாக ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், ஹர்பஜன்சிங் ஆகியோர் கதாநாயகர்களாக இருந்தார்கள்.
ஆஸ்திரேலியா அணியின் குறிப்பிட்ட அந்த டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் 2001 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விவிஎஸ்.லட்சுமணன் 281 ரன்கள், ராகுல் டிராவிட் 180 ரன்கள், ஹர்பஜன் சிங்கின் மறக்க முடியாத ஹாட்ரிக் என, போட்டியின் கடைசி நாளில் கடைசி நேரத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இதைத்தொடர்ந்து மூன்றாவதாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று இரண்டுக்கு ஒன்று என ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இன்று வரையிலும் கிரிக்கெட் உலகில் அந்தத் தொடருக்கு மிகப்பெரிய பார்வை இருந்து வருகிறது. உலகில் எவ்வளவு பெரிய அணியையும் இன்னொரு அணி வீழ்த்த முடியும் என்பதற்கு அந்த தொடரே முக்கிய சாட்சி.
இது குறித்து பேசி இருக்கும் ஆடம் கில்கிறிஸ்ட் கூறும்பொழுது ” இங்கிலாந்தில் நடந்து கொண்டிருந்த சாம்பியன் டிராபி தொடரின் போது நான் முற்றிலும் பீதி அடைந்தேன்.காரணம் அப்பொழுது கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங் பந்து பிடிக்க சென்று விரலில் காயம் அடைந்தார். அவர் தொடர்ந்து கொஞ்ச நேரம் களத்தில் இருந்து வெளியேறினார். ஒருவேளை காயம் பெரித ஆனால் அவர் அடுத்து 2004 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இடம்பெற முடியாது”
“இதன் காரணமாக நான் பதட்டம் அடைய ஆரம்பித்தேன். ஏனென்றால் எனக்கு இந்தியாவில் 2001 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடர் ஞாபகத்தில் வர ஆரம்பித்தது.அது ஒரு காவியமான தொடர். சிறந்த டெஸ்ட் தொடர்களில் ஒன்று. நான் அந்த தொடரின் முதல் போட்டியில் நன்றாக விளையாடி சதம் அடித்திருந்தேன். ஆனால் அதற்குப் பிறகு கொல்கத்தாவில் ராகுல் டிராவிட், லட்சுமணன் சிறப்பாக விளையாடினார்கள். மூன்றாவது டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றினார்கள்”
இதையும் படிங்க : 35% உடல் கொழுப்பு ஒரு பிரச்சனையா?.. பிரித்வி ஷாவுக்கு செய்வது அநியாயம் – சுனில் கவாஸ்கர் விமர்சனம்
“எனவே 2001 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு பிறகு நான் நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். மீண்டும்இந்தியா சென்று விளையாட தயாராக இருக்கிறேனா என்று எனக்கு அப்போது உறுதியாக தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.