ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் ஜெய்ஸ்வால் சதம் அடித்தது சச்சின் பெர்த் மைதானத்தில் சதம் அடித்தது போல இருந்தது என ஆஸ்திரேலிய முன்னாள் கோச் டேரன் லெஹ்மன் கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் அடித்து 161 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பெர்த் மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரராகவும் சாதனை படைத்தார்.
இந்திய அணிக்கு கிடைத்த நம்பிக்கை
நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முழுவதுமாக தோற்று ஆஸ்திரேலியாவுக்கு வந்திருந்த இந்திய அணிக்கு கட்டாய வெற்றி ஆரம்பத்திலேயே தேவைப்பட்டது. இப்படியான நிலையில் இந்திய அணி 150 ரன்கள் மட்டும் எடுத்து முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆகி இருந்தது.
இந்த சூழ்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ்க்கு வந்து ஜெய்ஸ்வால் புத்திசாலித்தனமான பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 161 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்று பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டார். இதனால் ஜெய்ஸ்வால் இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சச்சின் அடித்த அதே சதம்
இது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் பயிற்சியாளர் டேரன் லெஹ்மன் கூறும்பொழுது “ஜெய்ஸ்வால் பெரிய சதம் அடித்து இந்தியாவை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கிறார். அவருக்கு கிடைக்கும் எல்லா பாராட்டுக்கும் அவர் தகுதியானவர். அவர் மிகச் சிறந்தவராக இனி இருக்கப் போகிறார். சச்சின் 18 வயதில் இதே மைதானத்தில் வந்து எங்களை ஆச்சரியப்படுத்தி அடித்த சதம் போலவே இதுவும் இருக்கிறது”
இதையும் படிங்க : விராட் கோலி ஜெய்ஸ்வால் கிட்ட இத கத்துக்கணும்.. புது கிங் வேற லெவல்ல ஆடறாரு – மஞ்ச்ரேக்கர் கருத்து
“ஜெய்ஸ்வாலுக்கு தனது சாட்டை விளையாடுவதற்கு நல்ல நேரம் இருக்கிறது. இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட பந்தில் அவர் மூன்று அல்லது நான்கு ஷாட் விளையாட முடியும். அவர் தான் இன்னிங்ஸில் செய்த தவறை திருத்திக் கொண்டு உடனடியாக திரும்பி வந்து மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார். இனி அவர் நிறைய விளையாடி, நிறைய சாதனைகளை முறியடிப்பார்” என்று கூறியிருக்கிறார்.






