விராட் கோலி ஜெய்ஸ்வால் கிட்ட இத கத்துக்கணும்.. புது கிங் வேற லெவல்ல ஆடறாரு – மஞ்ச்ரேக்கர் கருத்து

0
605
Manjrekar

இந்தியா அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விராட் கோலி ஜெய்ஸ்வாலை பார்த்து ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பேட்டிங்கில் கற்றுக் கொள்ள வேண்டும் என பேசி இருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி 161 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பெர்த் மைதானத்தில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்கின்ற சாதனையையும் படைத்தார்.

- Advertisement -

ஜெய்ஸ்வாலின் அதிரடி மாற்றம்

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து ஏமாற்றம் தந்திருந்தார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துகளை விட்டு விளையாடுவதிலும், பேக் புட்டில் சிறப்பான முறையில் விளையாடி ரன்கள் எடுப்பதிலும் மாற்றத்தைக் கொண்டு வந்து சதம் அடித்து அசத்தினார்.

மேலும் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென அதிரடிக்கு செல்வதும் பின்பு உடனே அங்கிருந்து திரும்பி அமைதியாகி விடுவதுமாக ஜெய்ஸ்வால் எதிரணியை குழப்பிக் கொண்டே இருந்தார். இதனால் அவர் எப்போது அடிக்க வருகிறார் எப்போது அமைதியாக விளையாடுகிறார் என்பது குறித்து பந்துவீச்சாளர்களுக்குஎதுவும் தெரியவில்லை. இப்படி ஜெய்ஸ்வால் அதிரடியான மாற்றங்களை செய்து கொண்டார்.

- Advertisement -

விராட் கோலி இதை கற்றுக் கொள்ள வேண்டும்

இதுகுறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறும் பொழுது ” ஜெய்ஸ்வால் ஸ்கொயர் கட் ஷாட்டை கொஞ்சம் மற்றவர்களை விட தாமதமாக விளையாடுகிறார். இந்த ஷாட்டை விளையாடுவதில் இது ஐடியல் இல்லை. ஆனாலும் அவர் இதை விளையாடும் பொழுது பேக் புட் பஞ்ச் மிக சிறப்பாக இருக்கிறது. புதிய கிங்கான ஜெய்ஸ்வால் பேக் புட்டில் விளையாட விரும்புகிறார்”

இதையும் படிங்க : பாகிஸ்தான் ஜிம்பாப்வே ODI டி20 தொடர்.. இந்தியாவில் எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டி அட்டவணை – முழு விபரங்கள்

“அதே சமயத்தில் தற்போதைய கிங்கான விராட் கோலி முன் பாதத்திலே விளையாடுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால் ஜெய்ஸ்வால் 64% ரண்களை பேக் புட்டில் விளையாடி ஸ்கொயர் பின்னால் எடுத்தார். எனவே விராட் கோலி ஜெய்ஸ்வாலை பார்த்து இந்த விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அவர் தொடர்ந்து பிரண்ட் புட்டில் விளையாடுவதை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -