எங்க இடத்தில் எங்கள் எதிரா சிறப்பாக ஆடிய ஒரே வீரர் சச்சின் மட்டும் தான்.. தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் பேட்டி

0
5627

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. நீண்ட ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததால், ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே காரணமாக அமைந்துள்ளது.

முதல் இன்னிங்ஸிலேயே 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. அதன்பின் கேஎல் ராகுலின் அபாரமான சதம் காரணமாக 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி விளாசிய 76 ரன்கள் இல்லையென்றால், இந்திய அணியின் ஸ்கோர் 60ஆக மட்டுமே இருக்கும்.

- Advertisement -

பவுலர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், பேட்ஸ்மேன்களின் மோசமான செயல்பாடு ஒட்டுமொத்த இந்திய அணியையும் புறட்டி போட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி 31 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் திணறி வருவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஆலன் டொனால்ட் பேசும் போது, தென்னாப்பிரிக்கா மண்ணில் எங்களை எதிர்த்து சிறப்பாக சிறப்பாக விளையாடிய ஒரே பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் மட்டும் தான். எங்களுக்கு எதிராக விளையாடிய போது, மிடில் ஸ்டம்ப் லைனில் நிற்பதற்கு பதிலாக கொஞ்சம் முன் நகர்ந்து ஸ்டான்ஸில் நின்று பந்துகளை சிறப்பாக தவிர்த்து விளையாடுவார்.

தென்னாப்பிரிக்காவை பொறுத்தவரை எவ்வளவு சிறப்பாக பந்தை தவிர்க்கிறோமோ, அவ்வளவு சிறப்பாக ரன்களை சேர்க்க முடியும். பவுலர்களை உங்களை நோக்கி வரவழைத்தால், நிச்சயம் ரன்களை சேர்க்க முடியும். கேப்டவுனை பொறுத்தவரை எளிதாக பிளாட் பிட்ச்சாக மாறிவிடும். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற சிறந்த பிட்ச்சாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தென்னாப்பிரிக்கா மண்ணில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் இதுவரை 1161 ரன்களை விளாசியுள்ளார். இங்கிலாந்து முன்னாள் வீரர் ஹாம்மாண்ட்-க்கு பின் தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக விளையாடிய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் மட்டும்தான்.

மொத்தமாக 4 சதங்களை விளாசியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். அவருக்கு பின் இந்திய வீரர்களில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தலா 2 சதங்களை விளாசியுள்ளனர். அதேபோல் தென்னாப்பிரிக்காவில் விராட் கோலி மிகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.