“முன்ன நடந்ததை மறந்துடுங்க.. இப்ப என்ன செய்றோம்னு பாருங்க..!” – அதிரடியான மாற்றங்களுடன் களமிறங்கிய ரோகித் சர்மா அசத்தலான பேச்சு!

0
208
Rohit

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் தோல்விகளை சந்திக்காத இரு அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தரம்சாலா மைதானத்தில் மோதிக் கொள்ளும் போட்டிக்கு டாஸ் போடப்பட்டு இருக்கிறது.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக இந்தியா இரண்டாவதாக பேட் செய்ய இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியில் காயத்தின் காரணமாக ஹர்திக் பாண்டியா இடம்பெறாத நிலையில், அவருடைய இடத்தில் சூரியகுமார் யாதவ் இடம்பெறுகிறார். நியூசிலாந்து அணியில் இரண்டு இடதுகை சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதை குறிவைத்து இடதுகை பேட்ஸ்மேன் இசான் கிஷான் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சர்துல் தாக்கூர் இடத்திற்கு பலராலும் பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட முகமது சமி உள்ளே வந்திருக்கிறார். இந்த போட்டியில் இந்திய அணி ஐந்து பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர் ஜடேஜா உடன் ஏழு பேட்ஸ்மேன் என்று களம் இறங்குகிறது.

மேலும் நியூசிலாந்து அணியில் கடந்த போட்டியில் இருந்து எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. விரலில் காயம் அடைந்துள்ள கேன் வில்லியம்சன் தற்போதைக்கு திரும்ப மாட்டார் என்றே தெரிய வருகிறது.

- Advertisement -

டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது ” முதலில் பந்து வீசுவதற்கான எந்த காரணங்களும் பெரிதாக கிடையாது. நேற்று இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபொழுது இரவில் பனிப்பொழிவு வந்தது. இதன் காரணமாக பந்துவீச்சை தேர்வு செய்து விட்டேன். இலக்கைத் துரத்துவதற்கு நம்மை நம்புவோம்.

தற்போதைய வேகத்தை தொடர்வது மிக முக்கியமானது. நியூசிலாந்துக்கு எதிராக கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது அவசியமற்றது. அதை எல்லோரும் மறந்து விடுங்கள். எப்பொழுதும் நாம் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். தரம்சாலா எல்லோரும் வந்து விளையாட விரும்பும் அழகான மைதானம். இந்த போட்டியில் ஹர்திக் மற்றும் சர்துல் இருவரும் இல்லை. சூர்யா மற்றும் சமி இருவரும் விளையாடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார்!

நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் கூறும் பொழுது “நாங்களும் பந்துவீச்சையே தேர்ந்தெடுத்து இருப்போம். இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு வரும் என்பதை அறிவோம். நாம் என்ன செய்தாலும் அதை நன்றாக செய்ய வேண்டும். இருக்கின்ற வேகத்தை தொடர வேண்டும். நாம் ஒரு புதிய தளத்தில் மற்றும் புதிய நிலைமைகளில் இருக்கிறோம். எனவே இதற்கு தகுந்தவாறு சீக்கிரத்தில் மாற வேண்டும். நாங்கள் ஒரே அணியை கொண்டு விளையாடுகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!