2023 ஐபிஎல் மறந்து போச்சோ.. நாதன் லயனுக்கு ஓபன் சேலஞ்ச் விட்ட ஹாரி புரூக்!

0
984
Brook

இன்று இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இங்கிலாந்து பர்ஃபிங்காம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் உலகப் புகழ்பெற்ற ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி துவங்க இருக்கிறது.

ஆஸ்திரேலியா அணி இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக முன்கூட்டியே அங்கு சென்று தங்கி இருந்து பயிற்சிகள் பெற்று இந்திய அணியை வீழ்த்தி பட்டத்தையும் வென்று தற்பொழுது தொடருக்கு மிகச்சிறப்பாக தயாராகி இருக்கிறது.

- Advertisement -

அதேசமயத்தில் இங்கிலாந்து அணி இந்த மாதம் ஒன்றாம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு பயிற்சி போட்டி போல அயர்லாந்து அணியை வைத்து விளையாடியது. மேலும் கடந்த ஆண்டு முதல் இங்கிலாந்து அணி தாக்குதல் பாணியில் விளையாடி மிகச் சிறப்பான முடிவுகளைப் பெற்று வருகிறது.

எனவே இங்கிலாந்து அணி தற்போது சிறந்த பந்துவீச்சு தாக்குதலை கொண்டு இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக எப்படி விளையாடும் என்று உலகம் முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்காக 11 டெஸ்ட் இன்னிங்ஸ் மட்டும் விளையாடி 818 ரன்களை 81 ஆவரேஜில் நான்கு சதங்களுடன் குவித்திருக்கும் ஹாரி புரூக் பேசுகையில் ” நான் ஆஸ்திரேலியாவின் நாதன் லயனை அடித்து விளையாட விரும்புகிறேன். எங்கள் அணியின் எல்லா பேட்ஸ்மேன்களும் அவரை அடித்து விளையாடவே செய்வார்கள். நான் சரியான இடைவெளிகளையும் மற்றும் வித்தியாசமான இடைவெளிகளிலும் விளையாடக்கூடிய வீரனாக என்னை உணர்கிறேன்.

- Advertisement -

சிறந்த அணிகளில் ஆஸ்திரேலிய அணியும் ஒன்று. நான் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடி என்னை நிரூபிக்க நினைக்கிறேன். நான் இந்த சவாலை மிகவும் விரும்புகிறேன். ஆசஸ் தொடரை மிகவும் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்!” என்று கூறி இருக்கிறார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருக்காக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 13.25 கோடிக்கு இவர் வாங்கப்பட்டார். அப்பொழுது டெஸ்ட் போட்டிகளில் இவர் விளையாடிய விதத்திற்கு இவரை அடுத்த விராட் கோலி என்று பலர் கூறி வந்தார்கள்

இந்த நிலையில் இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் 11 போட்டிகள் விளையாடி வெறும் 190 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் ஒரு சதமும் அடக்கம். 190 ரன்னில் ஒரு சதம் இருந்தால் மற்ற 10 போட்டிகளில் இவரது பேட்டிங் எந்த விதத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். எனவே இதை வைத்து இவரை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்!