“உங்கள மாதிரி மார்ஸ் சதத்திற்கு ஆசைப்படல.. பாத்து கத்துக்கோங்க!” – கில் ஸ்ரேயாஸ் மீது இந்திய முன்னாள் வீரர் தாக்கு!

0
1249
Gill

நேற்று இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட கடைசி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போட்டியில் ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர்கள் வார்னர் மற்றும் மார்ஸ் இருவரும் சிறப்பான அதிரடியான துவக்கம் தந்து போட்டியை வெல்ல வைத்தனர்.

இந்த போட்டியில் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட நினைத்து வார்னர் அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார். இதேபோல் 96 ரன்களில் இருந்த மார்ச் எந்த இடத்திலும் ஆட்டத்தின் வேகத்தை குறைக்காமல் சதத்தைப் பற்றி நினைக்காமல் விளையாடி ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 20 முதல் 30 ஓவர்கள் வரை விளையாடி ஸ்ரேயாஸ் மற்றும் கில் இருவரும் 52 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இருவரும் சதத்திற்காக மெதுவாக விளையாடினர் என்கின்ற குற்றச்சாட்டு அப்பொழுதே இருந்தது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ” டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தட்டையான ஆடுகளத்தில் இந்தியாவை தாக்கியது. பும்ரா தனது முதல் ஐந்து ஓவர்களில் 51 ரன்கள் தந்தார். இது அடிக்கடி நடக்காத ஒன்று. சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் ரன்கள் தந்தார்கள். முதல் நான்கு பேர் அரை சதம் அடித்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் அதில் யாராவது ஒருவர் சதம் அடித்திருக்க முடியும்.

மார்ஸ் சதத்திற்கு மிக அருகில் வந்தார். அவருடைய பேட்டிங்கில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒன்று, அவர் ரன் அடிக்கும் வேகத்தை குறைக்கவில்லை. அவர் சதத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. அவர் தொடர்ந்து அடிக்க விரும்பினார். அதனால் ஆட்டம் இழந்தது குறித்து அவர் கவலைப்படவில்லை.

- Advertisement -

கில் மற்றும் ஸ்ரேயாஸ் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அமைத்த பார்ட்னர்ஷிப்பில் சுவாரசியமான பகுதி எதுவென்றால், அவர்கள் 20 முதல் 30 ஓவர் வரை 52 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் விக்கெட்டை விட்டுக் கொடுக்கவில்லை. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா சிறப்பாக பந்தும் வீசவில்லை. இருவரும் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால் ரன்கள் வரவில்லை.

இந்த மேட்ச் பரவாயில்லை ஸ்ரேயாஸ் காயத்தில் இருந்து திரும்ப வந்து ரன் எடுக்க நினைக்கிறார். திரும்பிப் பார்த்தால் இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்று இருக்கிறது. ஆனால் முடிந்த அளவு பந்துகளை பயன்படுத்தி அதிக ரன்கள் எடுக்க வேண்டும். 20 முதல் 30 ஓவரில் 70 மற்றும் 75 ரன்கள் எடுத்திருந்தால், இந்தியா 399 ரன்களுக்கு பதிலாக 425 ரன்கள் எடுத்திருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!