“இந்தியாவுக்கு பவுலிங்ல இந்த விஷயத்துக்கு.. ஒரே பையன்தான் இருக்கான்.. விட்டுராதிங்க” – பாக் அமீர் பேச்சு

0
185
Amir

தற்பொழுது இந்திய கிரிக்கெட்டில் எல்லா அம்சங்களும் கொண்ட வீரர்களும் இருப்பதாகத் தெரிகிறது. சில முக்கியமான இடங்களுக்கான வீரர்கள் குறைவாக இருந்தாலும், முன்பு போல் சுத்தமாக இல்லாமல் இருக்கிறார்கள் என்பது நல்ல விஷயம்.

அதே சமயத்தில் உலகம் முழுக்க வேகப்பந்து வைத்து ஆல் ரவுண்டருக்கு பற்றாக்குறை இருக்கிறது. எனவே இந்திய கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா இடத்தை நிரப்பும் வீரர் இல்லை என்பதை மிகவும் கவலைப்படும் விஷயமாக எடுத்துக் கொள்ள தேவையில்லை.

- Advertisement -

மேலும் இங்கே அதை ஈடு கட்டுவதற்கு தீபக் சகர், ஷர்துல் தாக்கூர் மற்றும் தற்பொழுது சிவம் துபே என ஓரளவுக்கு வீரர்கள் கிடைத்திருக்கிறார்கள். இதன் மூலம் கொஞ்சம் இந்த இடத்தை நிரப்பி இந்திய அணி நிர்வாகம் பயணிக்கும். மேலும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியில் அர்சன் குல்கர்னி விளையாடி வருகிறார்.

மேலும் சில வருடங்களுக்கு முன்பு இடதுகை பேட்ஸ்மேன்கள் மற்றும் இடதுகை பந்துவீச்சாளர்களுக்கு இந்திய அணியில் பெரிய பற்றாக்குறை நிலவியது. இதன் காரணமாக ஒட்டுமொத்த அணிக்குமே சில முக்கியமான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து கடந்த மூன்று வருடங்களுக்குள் இந்தக் குறை ஓரளவுக்கு மேலே சரி செய்யப்பட்டு விட்டது. குறிப்பாக தற்பொழுது பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் முக்கியமான நான்கு இளம் இடது கை பேட்ஸ்மேன்கள் வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் பந்துவீச்சுக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளராக அர்ஸ்தீப் சிங் மட்டுமே இருக்கிறார். வேறு யாருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்து தயார் படுத்தி வைக்க முடியவில்லை. மேலும் கவனம் ஈர்க்கும் இடதுகை வேகப் பந்துவீச்சாளர்களும் உள்நாட்டில் இல்லை.

இதையும் படிங்க : ஐசிசி ODI உலக அணி.. ரோகித் கேப்டன்.. 6 இந்திய வீரர்களுக்கு இடம்.. முக்கிய வீரருக்கு இடமில்லை

இந்த நிலையில் அர்ஸ்தீப் சிங் குறித்து பாகிஸ்தான் அணியின் இடது கை முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் கூறும் பொழுது “அர்ஸ்தீப் இந்திய அணிக்கு ஒரு சிறந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளராக தற்பொழுது இருக்க முடியும். 135 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய இப்படியான ஒரு இடதுகை பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு தேவை. தற்பொழுது இதற்கு அர்ஸ்தீப் மட்டுமே இருக்கிறார். முகமது சிராஜும் சில காலத்தில் பெரிய அளவுக்கு வளர்ந்து இருக்கிறார். இது இந்திய கிரிக்கெட் நல்ல அறிகுறி” என்று கூறி இருக்கிறார்.