“அடுத்த 4 போட்டிய நாங்க வேற மாதிரி யோசிக்கிறோம்… அது மட்டும் நடந்தா போதும்!” – கேஎல்.ராகுல் சிறப்பு பேட்டி!

0
2523
Rahul

இந்திய அணி இன்று லக்னோ மைதானத்தில் நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட காரணத்தினால், அந்த அணி எந்த வித நெருக்கடியும் இல்லாமல் இந்திய அணி மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு நெருக்கடியாக அமைகின்ற விஷயம் தற்பொழுது ஹர்திக் பாண்டியா இல்லை என்பதுதான். அவரது இடத்தில் இடம்பெற்ற சூரியக்குமார் கடந்த போட்டியில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகிவிட்டார். எனவே அவர் பேட்டில் இருந்து ரன் வர வேண்டியது அவசியமாக இருக்கிறது.

மேலும் இந்திய அணி கடைசி ஐந்து போட்டிகளாக இரண்டாவதாக பேட் செய்து வருகிறது. முதலில் பேட் செய்து சரியான இலக்கை கொண்டு வருவதும், அதை பந்துவீச்சின் மூலம் காப்பாற்றுவதையும் பரிசோதனை செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறது.

இதுகுறித்து பேசி உள்ள கேஎல்.ராகுல் கூறும் பொழுது ” ஹர்திக் அணியில் ஒரு முக்கியமான வீரராக இருந்திருக்கிறார். தற்பொழுது அவரை நாங்கள் தவிர விடுகிறோம். அவருடைய இடத்தில் சூர்யாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். அவர் எப்படிப்பட்ட வீரர் என்று எங்களுக்கு தெரியும். அதனால் ஹர்திக் பாண்டியா திரும்ப வரும் வரையில் சூர்யா மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அவர்கள் இப்பொழுதும் ஆபத்தான அணியாகத்தான் இருப்பார்கள். அவர்களுடன் இதுவரை என்ன நடந்தது என்று பார்க்க மாட்டோம். போட்டியில் என்ன செய்வது என்றுதான் பார்ப்போம்.

அடுத்த கட்டத்திற்கு நாங்கள் செல்வதற்கு முன்னால் முதலில் பேட்டிங் செய்தால் நன்றாக இருக்கும். அடுத்த நான்கு போட்டிகளில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்வதாக இருந்தால், இன்னிங்சை எப்படி வேகப்படுத்துவது என்பதை பார்க்க நல்ல சவாலாக இருக்கும். நாங்கள் முதலில் பேட்டிங் செய்து சில காலம் ஆகிவிட்டது.

நாங்கள் உண்மையில் தொடர்ந்து ஆக்ரோஷமாக இருந்து வருகிறோம் என்று நினைக்கிறேன். ஆசியக் கோப்பைக்கு நாங்கள் வந்ததிலிருந்து எங்களுடைய தயாரிப்புகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட இடங்களில், அவர்கள் தேவையான அளவுக்கு செயல்பட்டு இருக்கிறார்கள். நாங்கள் நன்றாக தயாராகி விட்டோம், அதிலிருந்துதான் எங்களுக்கு நம்பிக்கை வருகிறது!” என்று கூறி இருக்கிறார்!