இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. பும்ரா அயர்லாந்துக்கு எதிராக நாளை படைக்க இருக்கும் மிகப்பெரிய சாதனை!

0
3845
Bumrah

இங்கிலாந்து அணி இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான உத்தேச அணியாக, தம் நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்க இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியை அறிவித்திருக்கிறது!

ஜோஸ் பட்லர் கேப்டன் ஆக தொடர்கிறார். இந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் திரும்ப வந்திருக்கிறார். அதே சமயத்தில் எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக இளம் நட்சத்திர வீரர் ஹாரி புரூக்கு இடம் அளிக்கப்படவில்லை. இவரை அடுத்த ஜோ ரூட் மற்றும் விராட் கோலியாக பார்ப்பதாக இங்கிலாந்து தரப்பில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் இன்னொரு பக்கம் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் குணமடையாததால் அணிக்குள் வரவில்லை. ஆனாலும் அவர் ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பைகக்கான இங்கிலாந்து அணியோடு சேர்ந்து இந்தியா வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணி தேர்வில் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக ஒருவரது பெயர் இடம் பெற்று இருக்கிறது. அவர் கஸ் அட்கின்சன் என்ற வேகப்பந்துவீச்சாளர். அவர் இதுவரையில் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடவில்லை.

ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களை அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்பது மட்டும் ஆச்சரியப்படுத்தவில்லை. மேலும் அவர் காயங்களுக்கு தொடர்ச்சியாக சிக்கி கொள்கிறார் என்பதுதான் வாய்ப்பு வழங்கப்பட்டதில் அவர்களைக் கூடுதலாக ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இவர் இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் 14 முதல் தரப் போட்டிகள், இரண்டு லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 41 டி20 போட்டிகள் விளையாடி இருக்கிறார். இவர் மணிக்கு 90 மைல் வேகத்தில் வீசக்கூடிய அதிவேக பந்துவீச்சாளராக இருக்கிறார். நடந்து கொண்டிருக்கும் 100 பந்து போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ்பட்லரை தடுமாற விட்டு கவனம் ஈர்த்திருந்தார். இவரது வேகம் மற்றும் துல்லியத்தை அடிப்படையாக வைத்து இவருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இவருக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புக் குறித்து இங்கிலாந்து தேர்வு குழுவின் தலைவர் முன்னாள் இங்கிலாந்து வீரர் லூக் ரைட் கூறும் பொழுது “முதல் முதலாக அந்த இடத்தில் இருப்பதற்கு கஸ் மிகத் தகுதியானவர். எல்லோரும் அவரை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அவர் உற்சாகமான வீரர். நூறு பந்து தொடரில் மட்டுமல்லாது டி20 பிலாஸ்ட் தொடரிலும் அவர் மிகச் சிறப்பான செயல்பாட்டை கொண்டு இருந்தார். நான் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் சில சமயங்களில் அவரது பந்துவீச்சால் என்னை தொந்தரவுப்படுத்தி இருக்கிறார். அவர் எங்களுக்கு உண்மையான சொத்து. அவருக்கு வாய்ப்பு வழங்கியதில் நாங்கள் பெருமை அடைகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!