16 வருடம்.. 6 வீரர்கள்.. சிஎஸ்கே வரலாற்றில் முதல் முறை.. மொத்தமாய் மாறி வேற லெவல் டீம்

0
219
CSK

இன்று சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே வரலாற்றில் முதல் முறையாக ஒரு அதிசயமான சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

இரு அணிகளுமே நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகின்றன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒன்பதாவது இடத்தில் புள்ளி பட்டியலில் இருக்க சிஎஸ்கே பத்தாவது இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக இரு அணிகளுமே வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

- Advertisement -

சிஎஸ்கே அணியில் எதிர்பாராத மாற்றங்கள்

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. சிஎஸ்கே அணியில் அதிரடியாக துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா நீக்கப்பட்டார். அவருடைய இடத்திற்கு சாம் கரன் கொண்டுவரப்பட்டார். மேலும் விஜய் சங்கர் இடத்திற்கு தீபக் ஹூடா கொண்டுவரப்பட்டார்.

இத்தோடு ஜேமி ஓவர்டன் நீக்கப்பட்டார். அவருடைய இடத்திற்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிவால்ட் பிரிவியஸ்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சிஎஸ்கே ரசிகர்களே எதிர்பார்க்காத மாற்றமாக அமைந்திருக்கிறது. அதே சமயத்தில் விஜய் சங்கர் இடத்திற்கு இளம் வீரர் வன்ஸ் பேடி விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

- Advertisement -

சிஎஸ்கே வரலாற்றில் முதல் முறை

இன்று சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் 6 வீரர்கள் 26 வயதிற்கும் குறைந்தவர்களாக இடம் பெற்று இருக்கிறார்கள். மேலும் இன்று இம்பேக்ட் பிளேயர் இடத்தில் அன்சூர் காம்போஜ் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அவரும் விளையாடினால் சிஎஸ்கே வரலாற்றில் முதல்முறையாக 7 வீரர்கள் 26 வயதிற்கும் குறைவானவர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சிஎஸ்கே அணி டாடி ஆர்மி என்று அழைக்கப்படும். தற்போது இது மாறி இருக்கிறது.

இதையும் படிங்க : சும்மா குறை சொல்லாதீங்க.. எங்க பலமான டீமுக்கு இது மட்டும் நடந்தா திரும்ப ஜெயிக்கிறத தடுக்க முடியாது – பேட் கம்மின்ஸ்

ஆயுஸ் மத்ரே 17, சேக் ரஷீத் 20, நூர் அகமத் 20, டிவால்ட் பிரிவியஸ் 21, மதிஷா பத்திரனா 22, அன்சூல் காம்போஜ் 24, சாம் கரன் 26 வயது என ஏழு வீரர்கள் 26 வயதுக்குள் குறைவாக இடம் பெற்று இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு இரண்டு வீரர்களை சரியாக தேர்வு செய்தால் சிஎஸ்கே அணி வலிமையானதாக மீண்டும் உருவாகி வரும் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது.

- Advertisement -