சும்மா குறை சொல்லாதீங்க.. எங்க பலமான டீமுக்கு இது மட்டும் நடந்தா திரும்ப ஜெயிக்கிறத தடுக்க முடியாது – பேட் கம்மின்ஸ்

0
65

ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன.

இந்த சூழ்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தங்கள் அணியின் செயல்பாடு குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணியின் தொடர் தோல்வி

நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் வலுவான அணியாக கணிக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு ஆடுகளத்தின் சூழ்நிலையைக் கணிக்காமல் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்து அனைத்து பேட்ஸ்மேன்களும் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேற, 7 போட்டிகளில் 6 போட்டிகள் சன்ரைசர்ஸ் தோல்வி அடைந்திருக்கிறது.

மொத்தமாக 8 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில் இன்னும் 6 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே சன்ரைசர்ஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். என்பதால் இனி வரும் ஒவ்வொரு போட்டியும் அந்த அனைத்து சவாலான விஷயமாக அமையும். இந்த சூழ்நிலையில் சன்ரைசர்ஸ் அணிக்கு அதன் கேப்டன் கம்மின்ஸ் சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

கேப்டன் கம்மின்ஸ் கருத்து

இதுகுறித்து அவர் விரிவாகக் கூறும்போது “எங்கள் வீரர்களில் பெரும்பாலானோர் ஆக்ரோஷமானவர்கள் என்று நான் நினைக்கிறேன். இந்த சீசனில் நாங்கள் 280 க்கும் மேற்பட்ட ரன்கள் முதல் ஆட்டத்தில் எடுத்த போது எனக்கு கிடைத்த விஷயம் என்னவென்றால், அது பொறுப்பற்ற ஆட்டம் என்று நினைக்கவில்லை. அது முற்றிலும் கணக்கிடப்பட்ட ஆக்ரோஷமான ஒரு அணுகுமுறை. எங்களுக்கு இவ்வளவு வலிமை இருப்பது உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டம் ஆகும். எங்கள் வீரர்கள் என 200 ஸ்ட்ரைக்ரேட்டில் பேட்டிங் செய்வதற்கு மிகவும் பொருத்தமானவர்கள். எனவே அதைத்தான் நாங்கள் எப்போதும் ஊக்குவிக்கிறோம்.

இதையும் படிங்க:தம்பி ரியான் பராக் அடுத்தவர்களை பேச உனக்கு தகுதியே இல்ல.. நீ இத செஞ்சியா? – அமித் மிஸ்ரா விமர்சனம்

எல்லோரும் ரன்கள் எடுக்கும் நாள் நமக்கு இருக்காது என்று புரிந்து கொள்ள வேண்டும். ஒரு போட்டியில் ஒருவர் அல்லது இரண்டு பேர் மட்டும் விளையாடினால் அதுவே நாங்கள் வெற்றி பெறுவதற்கு போதுமானதாக இருக்கும். அவர்கள் அனைவருமே மேட்ச் வின்னர்கள். எங்கள் பேட்டிங் வரிசையில் யாராவது ஒருவருக்கு மாட்டினால் கூட 30 பந்துகளில் 100 ரன்கள் என்பது எடுக்க முடியும்” என்று கம்மின்ஸ் கூறி இருக்கிறார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் இன்று சன்ரைசர்ஸ் சென்னை அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இரண்டு அணிகளுக்குமே வெற்றி தேவைப்படும் பட்சத்தில் இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் சுவாரஸ்யமானதாக அமையும்.

- Advertisement -