இந்த வருடத்துக்கான ரஞ்சி சீசன் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்பொழுது ரஞ்சி தொடர் கால் இறுதி சுற்றை எட்டி இருக்கிறது.
இதில் ஒரு போட்டியில் மும்பை அணியும் பரோடா அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு சர்பராஸ் கான் தம்பி முசிர் கான் இரட்டை சதம் அடித்து காப்பாற்ற மும்பை அணி 384 ரன்கள் எடுத்தது.
இதற்கு அடுத்து விளையாடிய பரோடா அணிக்கு மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் வந்த இரண்டு வீரர்களும் சதம் அடித்த போதிலும் கூட, அந்த அணியின் மற்ற வீரர்கள் யாரும் சரியாக விளையாடாததால் 348 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை முதல் இன்னிங்ஸ் லீடிங் பெற்று, போட்டி டிரா ஆனாலும் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்தது.
இதற்கு அடுத்து விளையாடிய மும்பை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட் இழந்து 337 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் பத்தாவது மற்றும் கடைசி விக்கெட்டுக்கு தனுஷ் கோட்டியன் மற்றும் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் துசார் தேஷ்பாண்டே இருவரும் ஜோடி சேர்ந்தார்கள்.
இந்த ஜோடி அதிரடியாக விளையாடி, இருவரும் அரை சதம் அடித்து, பார்ட்னர்ஷிப் நூறு ரன்களை தாண்டியது. டிரா செய்தாலும் முதல் இன்னிங்ஸ் லீடிங் பெற்ற காரணத்தினால் அரை இறுதிக்கு செல்லலாம் என்பதால், இந்த ஜோடி தொடர்ந்து விளையாடுவது.
தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் தாண்டிய பொழுது, பத்தாவது இடத்தில் வந்த தனுஷ் கோட்டியன் சதம் அடித்தார். இதற்கு அடுத்த சிறிது நேரத்தில் 11ஆவது இடத்தில் வந்த துஷார் தேஷ்பாண்டேவும் சதம் அடித்தார்.
தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி 232 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது. சிறப்பாக விளையாடிய துஷார் தேஷ்பாண்டே 129 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 123 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தனுஷ் கோட்டியன் 129 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 120 ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டம் இழக்காமல் நின்றார். மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 569 ரன்கள் குவித்தது.
இதன் மூலம் மும்பை அணி 605 ரன்கள் ஒட்டுமொத்தமாக முன்னிலை பெற்றது. 606 ரன்கள் எடுத்தால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என்கின்ற இலக்குடன் பரோடா விளையாடுகிறது. இதில் சுவாரசியமான ஒரு விஷயம் என்னவென்றால், போட்டியில் இன்றுதான் கடைசி நாள்!
இதையும் படிங்க : எங்க விக்கெட் கீப்பரே துருவ் ஜூரல் விளையாடறதை ரசிக்கிறாரு.. நான் என்ன பண்ண? – பென் ஸ்டோக்ஸ் பேச்சு
மேலும் 78 வருட உலக முதல்தர போட்டி வரலாற்றில் 10வது மற்றும் 11வது இடத்தில் வந்த இருவரும் சதம் அடித்து இருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் 11வது இடத்தில் ரஞ்சி கிரிக்கெட்டில் துஷார் தேஷ்பாண்டே எடுத்துள்ள 123 ரன்கள்தான் மிக அதிகபட்சமாகும்.