தினேஷ் கார்த்திக்குக்கு இது வெண்ணையும் ரொட்டியும் மாதிரி சிச்சுவேஷன் ; ஆனால் போச்சு – கேப்டன் பாப் டு ப்ளிசிஸ் வருத்தம்!

0
5376
Faf

இன்று ஐபிஎல் தொடரில் பெங்களூரு மைதானத்தில் பெங்களூர் மற்றும் சென்னை அணிகள் மோதிக்கொண்ட பரபரப்பான போட்டி கடைசி ஓவர் வரை சென்று முடிந்திருக்கிறது!

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு கான்வே 83, சிவம் துபே 52 என இருவர் அரை சதம் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 226 ரன்களை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து சாதனை இலக்கை துரத்த களமிறங்கிய பெங்களூர் அணிக்கு மேக்ஸ்வெல் 76, கேப்டன் பாப் 62 என இருவர் அரை சதம் அடிக்க, வெற்றி சராசரியான எளிதான நிலைக்கு வந்தது.

கடைசி ஆறு ஓவர்களுக்கு 68 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பெங்களூரு அணியால் 59 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தனது மூன்றாவது வெற்றியை ஐந்தாவது ஆட்டத்தில் பெற்றது.

ஆட்டத்தின் தோல்விக்கு பிறகு பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டு ப்ளிசிஸ் ” நான் போட்டியின் ஆரம்பத்தில் ஒரு டைவ் அடித்தேன். அப்பொழுது என் விலா எலும்பில் கொஞ்சம் காயம் பட்டு விட்டது. அதுதான் என் அசெளகரியத்திற்கு காரணம். நாங்கள் சரியாக விளையாடினோம் என்று நினைக்கிறேன். முடிப்பதற்காக கடைசி ஐந்து ஓவர்களுக்கு மிகச் சிறப்பான நிலையையே வைத்தோம். இந்த சூழ்நிலை தினேஷ் கார்த்திக்குக்கு வெண்ணையும் ரொட்டியும் போன்றது. ஆனால் இன்று அவரால் முடியவில்லை!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நாங்கள் நல்ல நிலையில் இருந்த பொழுதும் எங்களால் வெற்றி பெற முடியாதது அவர்களது சிறந்த பந்துவீச்சை காட்டுகிறது. நாங்கள் கடைசி கட்ட பந்துவீச்சில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். இந்த மைதானத்தில் ஒரு பந்துவீச்சாளராக சிராஜ் நம்ப முடியாதவராக இருந்தார். மிகச் சிறப்பாக பந்து வீசினார். நான் இறுதியில் என் சக்தியை கொஞ்சம் இழந்து விட்டேன். இதனால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். மிடில் ஓவர்களில் நாங்கள் சுழற் பந்துக்கு எதிராக இன்னும் கடினமாக விளையாட வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!