“எங்க எல்லா திட்டத்துக்கும்.. விராட் கோலிகிட்ட பதில் இருந்தது.. மொத்தமா முடிச்சிட்டார்” – நியூசி கேப்டன் பிரமிப்பான பேச்சு!

0
8255
Virat

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், நியூசிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்பை கோட்டை விட்டு தோற்றது.

இன்று டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு இந்திய வீரர்கள் சில எளிய கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டு நல்ல நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

- Advertisement -

இதை ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்சல் இருவரும் மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள். ரவீந்தரா 75 ரன்கள் எடுக்க, மிட்சல் 130 ரன்கள் குவித்தார்.

இவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த நல்ல அடித்தளத்தை கடைசி பத்து ஓவர்களில் பயன்படுத்தி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் அதிரடியாக ரன்கள் குவிக்க முடியவில்லை.

நியூசிலாந்து குறைந்தபட்சம் 300 ரன்கள் எடுத்திருக்க வேண்டிய போட்டியில் 273 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும் 10 விக்கட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கடைசி கட்டத்தில் திரும்பி வந்து மிகச் சிறப்பான முறையில் நியூசிலாந்தை கட்டுப்படுத்தி விட்டார்கள்.

- Advertisement -

தோல்விக்குப்பின் பேசிய நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் கூறும் பொழுது “நாங்கள் கடைசி பத்து ஓவர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அந்த இடத்தில் இந்தியா சிறப்பாக பந்து வீசியதால், நாங்கள் சில ரன்களை அங்கேயே விட்டு விட்டோம். வந்து வீச்சில் எங்களுக்கு இரட்டை திருப்புமுனைகள் கிடைக்கவில்லை.

ரச்சின் மற்றும் மிட்சல் இருவரும் கடைசி பத்துபவர்களுக்கு எங்களுக்கு சிறந்த அடித்தளத்தை உருவாக்கினார்கள். அவர்கள் எங்களுக்கு ஒரு ப்ளூ பிரிண்ட் கொடுத்தார்கள். அது நாம் இருக்க விரும்பும் நிலைமைகள். அந்த இடத்தில் நாம் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் ஆபத்தானவர்களாக இருப்போம்.

விராட் கோலி அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார். அவர் ஆட்டத்தின் டெம்போவை கட்டுப்படுத்தினார். அவரைச்சுற்றி எல்லோரையும் ஆட வைத்தார்.

ஒரு கேப்டனாக நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் உங்களுடைய திட்டத்திற்கு வேலை செய்ய வேண்டும். ஆனால் எங்களுடைய பெரும்பாலான திட்டங்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்தார்.

மூடுபனி சீரற்ற விஷயமாக இருந்தது. சில நேரங்களில் இப்படியான சூழ்நிலைகளில் விளையாட வேண்டியது வரும். சில நாட்கள் விடுமுறை. அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டி இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!