சூப்பர் மேன் ஆக மாறிய ஹர்திக் பாண்டியா! நியூசிலாந்து அணி 59/6 – வீடியோ இணைப்பு !

0
319

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது .

முதலில் ஆடிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது முகமது சமி ஒரு அபாரமான இன் சுவிங்கர் மூலம் பின் ஆளன் விக்கெட்டை கிளீன் போல்ட் முறையில் வீழ்த்தினார். இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு நியூசிலாந்தின் பேட்ஸ்மேன்கள் திணறினர் .

நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது . முதல் 10 ஓவரிலேயே அந்த அணி 15 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது .

ஆட்டத்தின் ஒன்பதாவது ஓரை வீச வந்த ஹர்திக் பாண்டியாவின் நான்காவது பந்தில் டெவன் கான்வே அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். நேராக டிரைவ் செய்யப்பட்ட பந்தை தனது ஒரு கையினால் ஃபாலோ துருவில் தரையில் பந்து பட்டு விடாமல் லாவகமாக பிடித்தார் ஹர்திக் பாண்டியா . இந்த கேட்ச் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது .

பின்னர் நியூசிலாந்து அணியின் ப்ராஸ்வெல் மற்றும் பிலிப்ஸ் ஆறாவது விக்கெட்டிற்கு சற்று தாக்கு பிடித்து ஆடினர் அணியின் ஸ்கோர் ஐம்பதை கடந்த போது முகமது சமீ வீசிய பந்தில் சென்ற போட்டியின் ஆட்டநாயகன் ப்ராஸ்வெல் ஆட்டமிழந்தார் . தற்போது வரை நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 56 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது . இந்திய அணி தரப்பில் சமி 3 விக்கெட்டுகளையும் சிராஜ்,தாக்கூர் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.