145 வருட கிரிக்கெட் வரலாற்றில் இரு நாடுகளுக்காக சதமடித்த ஐந்து அபூர்வ வீரர்கள்!

0
5612
Rahul dravid

கிரிக்கெட் விளையாட்டில் சில நிகழ்வுகள் அபூர்வமானது. சிலது அபூர்வத்தோடு சுவராசியமானதும் கூட. இப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான், ஒரு வீரர் இரண்டு நாடுகளுக்காகச் சதம் அடிப்பது என்பதும்.

145 ஆண்டுக்கால கிரிக்கெட் வரலாற்றில், ஒரு வீரர் இரண்டு நாடுகளுக்காகச் சதமடித்த அபூர்வ சுவராசிய நிகழ்வு ஐந்து முறை நிகழ்ந்திருக்கிறது. இந்த நிகழ்வை அரங்கேற்றிய ஐந்து வீரர்கள் யாரென்றுதான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்!

- Advertisement -

கெப்லர் வெசல்ஸ்:

தென் ஆப்பிரிக்காவில் பிறந்த லெப்ட் ஹேன்ட் ஓபனிங் பேட்ஸ்மேன் கெப்லர் வெசல்ஸ், நிறவெறியால் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தடை பெற்றிருந்த போது, தனது 21வது வயதில் ஆஸ்திரேலியா சென்று, அந்நாட்டிற்காக 24 டெஸ்ட் போட்டிகளில் 1761 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு சதங்களும் அடக்கம். பின்பு 1985ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவர், தென் ஆப்பிரிக்கா மீதான தடையை ஐசிசி நீக்கியதும், 1991ஆம் வருடம் தென் ஆப்பிரிக்காவிற்காக விளையாட வந்து, தென் ஆப்பிரிக்கா அணிக்காக 16 டெஸ்ட் மற்றும் 55 ஒருநாள் போட்டிகளில் அடுத்த மூன்று ஆண்டுகள் விளையாடி, இரண்டிலும் தலா இரண்டு சதங்கள் அடித்தார்!

ராகுல் டிராவிட்:

- Advertisement -

தேசிய கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாட 2003ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து தேசிய அணிக்கு டிராவிட் ஒப்பந்தம் ஆனார். இதில் சோமர்செட் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 97 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 120ரன்கள் எடுத்தார். இந்திய அணிக்காக அவர் என்ன செய்துள்ளார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்திய அணிக்காக 43 சதங்களை ராகுல் டிராவிட் விளாசி இருக்கிறார்!

எட் ஜாய்ஸ்:

அயர்லாந்து டப்ளின் நகரில் பிறந்து வளர்ந்த எட் ஜாய்ஸ் உலகக்கோப்பையில் இரு அணிகளுக்காக விளையாடிய அபூர்வத்திலும் அபூர்வமான வீரர் ஆவார். இவர் முதலில் இங்கிலாந்துக்காக விளையாடினார். அப்பொழுது சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 107 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணிக்காக 17 ஆட்டங்களில் ஆட வாய்ப்பு கிடைத்த இவருக்கு, 2017ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இதற்கடுத்த நான்கு வருடங்கள் கழித்து ஐசிசி இவரை அயர்லாந்திற்காக ஆட அனுமதித்தது. அயர்லாந்திற்காக மொத்தம் 2151 ரன்கள் எடுத்த இவர், அதில் ஐந்து சதங்களை விளாசி இருக்கிறார்!

இயான் மோர்கன்:

எட் ஜாய்ஸை போல் இல்லாமல், இயான் மோர்கன் முதலில் அயர்லாந்திற்காக விளையாடினார். 2006 ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் லீக் போட்டியில் கனடாவுக்கு எதிராகச் சதமடித்தார். பின்பு 2009ஆம் வருடம் இங்கிலாந்து அணிக்காக விளையாட ஆரம்பித்து, பின்பு வெள்ளைப்பந்து போட்டிஙளுக்கு இங்கிலாந்தின் கேப்டனாகி, 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையையும் வென்றது எல்லாம் வரலாறு. இதில் 225 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக 13 சதங்களை இயான் மார்கன் அடித்திருக்கிறார்!

மார்க் சாப்மேன்:

ஹாங்காங் தாய், நியூசிலாந்து தந்தைக்கு பிறந்தவர் மார்க் சாப்மேன். இவர் 2011ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் லீக் தொடரில் தனது 16வது வயதில் ஹாங்காங் அணிக்காக அறிமுகம் ஆனார். 2015ஆம் ஆண்டு யு.ஏ.இ அணிக்கு எதிராகச் சதமடித்து, ஹாங்காங் அணிக்காக முதல் சதமடித்த வீரர் என்ற சிறப்பை பெற்றார். பின்பு 2018ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியில் இணைந்த இவர் 20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். சமீபத்தில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்காகச் சதமடித்து, இரு நாடுகளுக்காகச் சதமடித்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது வீரராய் இணைந்தார்!