ஒரு நாள் தொடர் மற்றும் டி20 என கிரிக்கெட்டில் சுவாரசியமூட்டும் பகுதிகள் இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்த பகுதிகளில் ஒன்றாகும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதையே பெரும்பாலான வீரர்கள் விரும்புகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களின் நட்சத்திர வீரர்கள் ஆக இருந்தும், இந்திய சர்வதேச அணியில் இடம்பெறாத ஐந்து முக்கிய வீரர்கள் குறித்து காண்போம்.
1.யுவேந்திர சஹால்
இந்தியாவின் டி20 மற்றும் ஒரு நாள் வடிவத்தில் முக்கிய வீரராக கருதப்படும் சுழற் பந்துவீச்சாளர் சஹால் இந்திய அணிக்காக இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முக்கிய சுழற் பந்துவீச்சாளராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற போது அணியில் இடம் பிடித்த வீரராகவும் இருந்தார்.
2.பிரியங்க் பஞ்சால்
இந்தியாவின் உள்நாட்டு அணியில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் பிரியங்க் பஞ்சாால் இதுவரை 120 முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும், 97 லிஸ்ட் ஏ போட்டிகளிலும், 59 டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். இதில் முதல் தர கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 314 ரன்கள் குவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 30 வயதான ஆல் ரவுண்டர் வீரரான இவர் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை.
3.அபிமன்யு ஈஸ்வரன்
அபிமன்யு ஈஸ்வரன் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபி தொடரில் கூட மிகச் சிறப்பாக விளையாடினது திறமையை நிரூபித்து வருகிறார். இதுவரை 97 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 7316 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் இன்னும் அறிமுகமாகவில்லை.
4.ருத்ராஜ் கெய்க்வாட்
இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் தற்போது இந்திய அணியில் தனது இடத்தை மெல்ல மெல்ல பிடிக்க போராடி வருகிறார். டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் தனது திறமையை ஏற்கனவே நிரூபித்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கான கதவு இவருக்கு இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடிக்கும் காயம் காரணமாக இவர் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிக்ஸ் அடிச்சாலும் கவலை இல்லை.. ரிஷப் பந்த் கிரீசில் இருந்தா என்னோட திட்டம் இது தான் – நாதன் லயன் பேட்டி
5.சஞ்சு சாம்சன்
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சன் இந்திய அணியில் ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் இன்னமும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இவர் விளையாடவில்லை.