ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் ; இஷான் கிஷான் உலகச்சாதனை!

0
3307
Ishankishan

மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் விளையாட பங்களாதேஷுக்கு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி சென்றுள்ளது!

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று பங்களாதேஷ் அணி தொடரை கைப்பற்றியது!

இதை எடுத்து இன்று தொடரில் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா தொடரை விட்டு வெளியேறி இருக்கிறார்!

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பங்களாதேஷ் அணி கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணிக்கு துவக்கம் தர சிகர் தவன் இசான் கிசான் இருவரும் களமிறங்கினார்கள். சிகர்தவன் மூன்று ரன்களில் ஐந்தாவது ஓவரில் ஆட்டம் இழந்தார்!

இதற்கு அடுத்து விராட் கோலி வர இசான் கிசானின் பேட்டிங் அதிரடி ஆரம்பித்தது. 85 பந்துகளில் அதிரடியாக சதத்தை அடித்த இசான் கிசான், இதற்கு அடுத்து 41 பந்துகளை சந்தித்து அபாரமாக இரட்டை சதம் அடித்து அசத்தார். 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்த இசான் கிசான் 131 பந்துகளில் 210 ரன்களை 24 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களுடன் நொறுக்கி தள்ளி ஆட்டம் இழந்தார்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பர் அடித்த அதிகபட்ச ரன் இதுதான். மேலும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் இவர்தான். பங்களாதேஷுக்கு எதிராக அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் இவர்தான். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக அடிக்கப்பட்ட இரட்டை சதம். இப்படி பல சாதனைகளை இன்று இசான் கிசான் தன்வசம் படுத்தி இருக்கிறார்!