“முதல்ல கால் இப்ப கை.. வெளியேறியது ஏன்?” – வெற்றிக்குப் பின் கேன் வில்லியம்சன் விளக்கம்!

0
1573
Williamson

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

நியூசிலாந்து அணிக்கு இந்த உலகக் கோப்பையில் இது தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியாகும். நல்ல ரன் ரேட் உடன் 6 புள்ளிகள் பெற்று தற்பொழுது நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்து இதே மைதானத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் திரும்ப வந்தார். கொஞ்சம் நல்ல பவுன்ஸ் இருந்த விக்கெட்டில் பங்களாதேஷ் அணியை பவுன்சர்கள் மூலம் 245 ரன்கள் சிறப்பாக நியூசிலாந்து கட்டுப்படுத்தியது.

இதற்கடுத்து விளையாடிய நியூசிலாந்து அணிக்கு திரும்ப வந்த ஸ்கேன் வில்லியம்சன் பேட்டிங்கில் 78 ரன்கள் எடுத்து மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்து, பந்து கையைத் தாக்கிய காரணத்தால் வெளியேறினார்.

மேற்கொண்டு களத்தில் நின்ற டேரில் மிட்சல் அதிரடியாக 67 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்து அசத்தினார். பங்களாதேஷ அணி உலக கோப்பையில் தனது மூன்றாவது போட்டியில் இரண்டாவது தோல்வியை பெற்றது.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறும் பொழுது “காலில் ஏற்பட்ட காயம் பரவாயில்ல. தற்பொழுது கையில் ஏற்பட்டிருக்கிறது. நாளை என்ன நிலைமை என்று உடனடியாக ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.

முதல் பாதியில் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் செல்வது நன்றாக இருந்தது. பவர் பிளேவுக்கு அடுத்து நடுவில் டெக்கை தாக்கி பந்து வீசலாம் என்று நினைத்தோம்.

இது நல்ல போட்டியளிக்க கூடிய விக்கெட். உண்மையில் இது நல்ல செயல்திறன். லாக்கி சிறப்பாக இருந்தார். வேகப் பந்துவீச்சாளர்கள் மிகவும் திறமையாக செயல்பட்டார்கள்.

அணி உடன் இருப்பது மற்றும் பார்ட்னர்ஷிப்பில் ஒரு பங்குடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது நல்ல குழு செயல் திறன். மிட்சல் எப்பொழுதும் அணிக்காக இருக்கக்கூடிய வீரர். அவர் பார்ப்பதற்கு எப்பொழுதும் அருமையாக இருந்திருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!