8வருடம் முதல்சதம்.. கடைசியாக சாதித்த சஞ்சு சாம்சன்.. இனிமேலும் வெளியே அனுப்புவிங்களா?

0
981
Sanju

தற்போது இந்திய அணி கே.எல்.ராகுல் தலைமையில் தென் ஆப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்று இருக்க, தொடர் சமநிலையில் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இறுதி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணியே டாசில் வெற்றி பெற்றது. ருத்ராஜ் இடத்தில் இடம் பெற்ற ரஜத் பட்டிதார் 16 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். சாய் சுதர்சன் 10 ரன்களில் வெளியேறினார். கேப்டன் கே எல் ராகுல் 21 ரன்கள் எடுத்தார்.

இதற்கடுத்து குறுகிய இடைவெளியில் மூன்று விக்கெட்டுகளை இந்திய அணி இழந்த காரணத்தினால், அடுத்து மூன்றாவது வீரராக வந்த சஞ்சு சாம்சன் மற்றும் ஐந்தாவது வீரராக வந்த திலக் வர்மா இருவரும் பொறுமையாக விளையாடினார்கள்.

இந்திய அணி 30 ஓவர்களை கடந்ததும் இவர்கள் இருவரும் தங்கள் ஆட்டத்தில் கொஞ்சம் வேகத்தை கூட்டினார்கள். திலக் வர்மா தன்னுடைய முதல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரை சதத்தை பதிவு செய்து 77 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 110 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

அதற்கு அடுத்து அதிரடியில் ஈடுபட முயன்ற சஞ்சு சாம்சன் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அக்சர் படேல் ஒரு ரன்னில் வெளியேறினார். இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங் 27 பந்தில் 38 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 9 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்தார்.

இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் சேர்த்து இருக்கிறது. சஞ்சு சாம்சங் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு முதல் சதம் கிடைத்திருக்கிறது. 2015 ஆம் ஆண்டு அவர் இந்திய அணிக்காக சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதற்கு அடுத்து 2021 ஆம் ஆண்டு அவருக்கு ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!