ராவல்பிண்டியில் வைத்து பாகிஸ்தானை இங்கிலாந்து பொளந்ததற்கு, என்ன சொல்கிறார்? – ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்!

0
3954

முதல் டெஸ்டின் முதல் நாளில் பாகிஸ்தான் அணியை இங்கிலாந்து வீரர்கள் பந்தாடியதற்கு சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 1ஆம் தேதி ராவல்பிண்டி மைதானத்தில் துவங்கியது

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்க துவக்க ஜோடி ஜாக் கிராலி மற்றும் பென் டக்கட் இருவரும் 233 ரன்கள் சேர்த்து வலுவான துவக்கத்தை அமைத்தனர். அதுவும் 6.53 ரன்ரேட்டில்.

பின்னர் வந்து வீரர்களும் இந்த அதிரடியை நிறுத்தாமல் தொடர்ந்தனர். துரதிஷ்டவசமாக ஜோ ரூட் 23 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனால் அதற்கு அடுத்த வீரர் ஆலி பாப் மற்றும் ப்ரூக் இருவரும் துவக்க ஜோடிகள் ஆடியதைப்போலவே இன்னும் அதிரடியாக விளையாடினர்.

இதில் ஆலி பாப் 108 ரன்களுக்கு அவுட் ஆனார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹாரி ப்ரூக் 81 பந்துகளில் 101 ரன்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 75 ஓவர்களுக்கு 506 ரன்கள் அடித்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளைப் போல ஆடாமல், ஒருநாள் போட்டிகளில் ஆடுவதைப்போல இவர்கள் விளையாடிய விதம் இருந்தது என்று பலரும் பாராட்டினர். மேலும் ஒரே நாளில் நான்கு இங்கிலாந்து வீரர்கள் சதம் அடித்திருக்கின்றனர். இதுவும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாகும்.

இப்படி எண்ணற்ற சாதனைகளை படைத்த பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய இங்கிலாந்து அணி குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் சோயிப் அத்தர். அக்தர் பேசியதாவது:

“இங்கிலாந்து அணி இரண்டு சதங்களுடன் டெஸ்ட் போட்டியை துவங்கி இருக்கிறது. அதுவும் அவர்களது ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் அதிகமாக இருக்கிறது. டெஸ்ட் போட்டிகள் மீது அனைவரும் கொண்டிருக்கும் மனநிலையை மாற்றி அமைக்கிறார்களா?” என்று முதலில் பெருமிதமாக பேசினார்.

அதன்பிறகு, முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இங்கிலாந்து வீரர்களில் சிலர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவல்கள் வந்தது. இதை குறிப்பிட்டு பேசிய சோயிப் பக்தர், “நல்ல வேலை செய்திகளில் சொன்னபடி இங்கிலாந்து வீரர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றனர். உடல்நிலை சரியில்லாத போது இப்படி 500 ரன்கள் அடிக்கிறார்கள் என்றால்? அவர்கள் நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் இன்னும் எத்தனை ரன்கள் அடித்து இருப்பார்கள்?.” என்று கிண்டலாக பேசினார்.

பின்னர், “பிரண்டன் மெக்கல்லம் டெஸ்ட் போட்டிகளில் மெதுவாக விளையாடுவதை விரும்பாதவர். ஆகையால் வீரர்களையும் அப்படி மெதுவாக இல்லாமல் ஆக்ரோசத்துடன் விளையாட வேண்டும் என்று கூறியிருக்கலாம். அதனால்தான் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடத் துவங்கினர். மேலும் அறிமுக வீரர் லிவிங்ஸ்டன் ஏழாவது இடத்தில் களமிறங்குகிறார். அதை வைத்து பார்க்கையில், எவ்வளவு ஆழமாக இங்கிலாந்தின் பேட்டிங் லைன்-அப் இருக்கிறது என்று தெரிகிறது.

தற்போது இங்கிலாந்து அணியின் மனநிலை முற்றிலுமாக மாறி இருக்கிறது. அணியில் இளம் வீரர்கள் நிறைந்து இருக்கிறார்கள். பாகிஸ்தான் அணி இப்படி திணறுவதை பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் மீண்டு வருவார்கள் என நம்புகிறேன். எங்களது வீரர்கள் இப்படி அடி வாங்குவதை பார்க்க முடியவில்லை.” என்றார்.