“தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றிய இந்தியா”- பரபரப்பாக தொடங்கிய போட்டி டிராவில் முடிவடைந்தது!

0
155

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை காட டெஸ்ட் தொடரில் ஆடி வந்தது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை அகமதாபாத்தில் தொடங்கியது.

இந்திய அணி இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் களம் இறங்கியது ஆஸ்திரேலியா. முதலில் ஆடிய அந்த அணி 480 களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் உஸ்மான் கவாஜா 180 ரன்களும் கேமரூன் கிரீன் 114 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 91 ரன்களை விட்டுக் கொடுத்து ஆரம்பிக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்தியா விராட் கோலி மற்றும் சுப்மண் கில் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 571 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மிகச் சிறப்பாக ஆடிய விராட் கோலி 186 ரன்களும் சுப்மண் கில் 128
ரன்களும் அக்சர் பட்டேல் பட்டேல் 79 ரண்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை பெற்றது.

இன்று தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அடியை விரைவில் ஆல் அவுட் ஆக்கி வெற்றிக்கான வழியை தேடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக ஆடி இந்தப் போட்டி டிராவில் முடிய காரணமாக அமைந்தனர். ஆடுகளமும் பந்துவீச்சிக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் அளிக்கவில்லை . இதன் காரணமாக இன்றைய ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 175 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அணியின் டிராவஸ் ஹெட் மிகச் சிறப்பாக ஆடி 90 ரன்கள் எடுத்தார் . மார்னஸ் லபுச்சேன் 63 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருடன் கேப்டன் ஸ்மித் 10 ரன்கள் உடன் களத்தில் இருந்தார்.

ஆட்டம் முடிவதற்கு சிறிது நேரமே மீதி இருந்ததால் இரண்டு அணி கேப்டன்களும் போட்டியை டிராவில் முடித்துக் கொள்வதாக அறிவித்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வென்றிருக்கிறது . இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக ஆடி 186 ரன்களை எடுத்த விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் இணைந்து தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டனர்.

- Advertisement -

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இலங்கை அணி நியூசிலாந்து அணியுடன் ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால் வருகின்ற ஜூன் மாதம் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன .